எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பெண்களுக்கான முன்னுரிமையினை வழங்கியுள்ளது - தவிசாளர் ஷோபா


எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பெண்களுக்கான முன்னுரிமையினை வழங்கியுள்ளது.பெண்கள் சார்பாக தேர்ந்தெடுக்கட்ட நான் இந்த சமூகத்தில் வாழ்கின்ற பெண்களுடைய பொருளாதாரம் வாழ்வாதாரம் பென்னுரிமை மற்றும் ஏனைய பெண்கள் சார்ந்த பணிகளை பெண் என்ற ரீதியில் அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து முன்னெடுப்பேன்.என்று கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் திருமதி ஷோபா ஜெயரஞ்சித் தெரிவித்தார்.

இன்று புதன் கிழமை (18.4.2018) தமது கடமையினை வைபவ ரீதியாக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர்தொடர்ந்து உரையாற்றும் போது தெரிவிக்கையில் தமது சேவைக் காலத்தில் பிரதேசத்தின் பெண்கள் எதிர் நோக்கும் வாழ்வாதார விடயங்கள் பொருளாதார அபிவிருத்திகளை தம்மாலான பங்களிப்பினை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தமது உரையில் தெரிவித்தார்.

மக்களுடைய அங்கீகாரத்தின் ஊடாக பதவியினை பெற்றுள்ள நாம் இன மத பேதமின்றி ஒருங்கினைந்த ஒரு சமூகமாக அனைத்து கிராமங்களையும் ஊழலற்ற சமூதாய முனைப்போடு நல்ல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து எமது மக்களின் அபிலாசைகளை அவர்களுடைய குறை நிறைகளையும் நாங்கள் நிறைவு செய்வது எமது எதிர்கால திட்டங்களாக எண்ணியுள்ளோம்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர்  சிவனேசதுரை சந்திரகாந்தன் சிறையில் இருந்தாலும் எம்மோடு அவருடைய எண்ணங்கள் சிந்தனைகள் எமது திட்டங்களுடன் இணைந்த வகையில் முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை இன்றைய நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் தேர்வாகிய பிரதேச சபை உறுப்பினர்களான கி.சேயோன் மற்றும் க.ரஞ்சிதமலா; ஆகியோர்கள் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.