கோவில் போரதீவில் மாறுமாமனிதம் கவிதைத் தொகுப்பு நூல் வெளியீடு


(இ.சுதாகரன்)
கோவில் போரதீவு இளைஞர் எழுச்சி ஒன்றிய கலை விளையாட்டுக் கழகத்தின் அனுசரனையில் மட்டக்களப்பு தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்தகவிஞர் அழகரசு (கோ.கணேஷ்) அவர்களின் மாறுமாமனிதம் கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு 21ம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு மட் /பட்/கோவில் போரதீவு விவேகானந்தா வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத் தலைவர் சட்டத்தரணி மு.கணேசராசா தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் செல்வி ஆர்.ராகுலநாயகி மற்றும் அதிவிசேட அதிதியாக கவிஞர் அண்ணாதாசன், விசேட அதிதிகளாக ஓய்வு நிலைப் பேராசிரியர் செ.யோகராசா, மட்டக்களப்பு காந்தியத் தலைவர் கலாநிதி அ.செல்வேந்திரன் மட்டு மாவட்டசமுர்த்திப் பணிப்பாளர் பி.குணரெத்தினம்,

சிறப்பு அதிதிகளாக போரதீவுப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி வே.குணராசசேகரம், போரதீவுப்பற்று சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் க.உதயகுமார், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பு.ஜீவராசா, கௌரவ அதிதிகளாக போரதீவுப்பற்று பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் எஸ்.சோமசுந்தரம்,கோவில் போராதீவு விவேகானந்த வித்தியாலயத்தின் அதிபர் க.சத்தியநாதன், சமுர்த்தி வங்கி முகாமையாளர் மா.சித்திரவேல் ஆலயங்களின் தர்மகர்த்தாக்கள, பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது வரவேற்புரையினை ஆசிரியர் த.நாகேந்திரன் நிகழ்த்தினார் அதனைத் தொடந்து நூல் வெளியீடு நடைபெற்றது.கவிஞர் அறிமுக உரையினை தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் ஓய்வு நிலை உத்தியோகத்தர் ப.குணசேகரமும் நூலுக்கான நயவுரையினை கவிஞர் அண்ணாதாசன் நிகழ்த்தினார். நன்றியுரையினை மட்டக்களப்பு மாவட்ட தமிழச் சங்கத்தின் செயலாளர் திருமதி சுந்தரமதி வேதநாயகம் நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.