மட்டக்களப்பு பொலிசாரினால் புத்தாண்டை வரவேற்கும் நிகழ்வு


(சிவம்)

பாரம்பரிய முறையினிலே தமிழ்; சிங்கள மக்கள் ஒன்றிணைந்து  கொண்டாடும் புதுவருடப் பிறப்பை முன்னிட்டு மட்டக்களப்பு பொலிசாரினால் விளம்பி புத்தாண்டை வரவேற்கும் நிகழ்வுகள் இன்று (15) பொலிஸ் வளாகத்தில் நடைபெற்றன.

பௌத்த, இந்து, கத்தோலிக்க, இஸ்லாமிய மதத் தலைவர்களின் ஆசியோடு புதுப்பானையிலே பால்பொங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இனங்களிடையே நல்லிணக்கம், புரிந்துணர்வு மற்றும் எமது பாரம்பரியங்களை பேணிப்பாதுகாக்கவும் இத்தகைய நிகழ்வுகள் காரணமாய் அமைகின்றன என மட்டக்களப்பு அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் யாக்கொட ஆராய்ச்சி, சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ். மென்டிஸ், பொலிஸ் அதிகாரிகள், பிரஜா பொலிஸ் அங்கத்தினர்கள், வர்த்தக சங்கத்தினர்கள் கலந்து கொண்டனர்.
இறுதியில் பாரம்பரிய உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.