தூத்துக்குடியில் படுகொலை கொல்லப்பட்ட 13 உறவுகளையும் நினைவு கூர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம்


(சிவம்)

இந்திய தூத்துக்குடியில் பொதுமக்கள் துப்பாக்கி சூட்டினால் படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து இன்று (26) மட்டக்களப்பு காந்திப் பூங்காவின் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சுற்றாடலை மாசுபடுத்தும் தூத்துக்குடி செப்புக் கம்பனியை மூடுமாறுகோரி நடாத்திய ஆர்ப்பாட்டத்தில் படுகொலை கொல்லப்பட்ட 13 பேரையும் நினைவு கூர்ந்தும், நீதி வேண்டியுமே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் ஆர்ப்பாடட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தமிழ் உறவுகளுக்கு நீதி வேண்டி ஈழத்து உறவுகளின் கண்டனத்தை மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில்; கட்சியின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு இந்திய அரசுக்கு எதிரான கோசங்களை எழுப்பினர்.