இலங்கை அதிபர் சேவை தரம் ஒன்றிற்கு மட்டக்களப்பு வலயத்தைச் சேர்ந்த 7 பேர் தெரிவு


(சிவம்)

இலங்கை அதிபர் சேவை தரம் ஒன்றிற்கு மட்டக்களப்பு வலயத்தைச் சேர்ந்த 7 பேர் தெரிவாகயுள்ள நிலையில் அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தினால் அண்மையில் கொழும்பில் வைத்து வழங்கப்பட்டன.

ஆர். வெல்லியோ வாஸ் (மட் புனித மிக்கல் கல்லூரி), ரி. ராஜ்மோகன் ( மட் மயிலம்பாவெளி விபுலானந்தா வித்தியாலயம்), திருமதி எஸ்.ரவிச்சந்திரா (மட் வின்சன் மகளிர் கல்லூரி), திருமதி என்.தர்மசீலன் (மட் அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் வித்தியாலயம்), திருமதி என்.பேரின்பநாதன் (மட் புனித திரேசா மகளீர் வித்தியாலயம்), திருமதி ரி.உதயகுமார் (மட ஆனைப்பந்தி இந்து மகளீர் கல்லாரி) ஆகியோர் தெரிவாகினர்.

குறித்த பதவிக்கான நேர்முகப் பரீட்சைக்கு 2600 பேர் தோற்றிய போதும் 263 பேர் மாத்திரம் தேசிய ரீதியில் தெரிவாகினர். இதில் 31 தமிழ் அதிபர்களும் 37 முஸ்லிம் அதிபர்களும் அடங்குகின்றனர். இவர்களுள் யாழ் மாவட்டத்தில் 3 பேரும் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 பேரும் தெரிவாகியிருந்தனர்.

இலங்கை அதிபர் சேவை தரம் 2 ஐச் சேர்ந்த 31 தமிழ் அதிபர்கள் தரம் 1 இற்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.