மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் பணிசீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவும் முகமாக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் பணி இன்று காலை தொடக்கம் ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது பெருந்தொகையான உலர் உணவு பொருட்கள் பிரதேச மக்களால் கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஊடாக சேகரிக்கப்பட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு இன்று (29.05.2018) பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் அவைகள் கையளிக்கப்பட்டன.
இவ் உன்னத பணியில் ஈடுபட்ட மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கிய அனைத்து உறவுகளுக்கும் பிரதேச செயலகம் சார்பாக நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.