மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உறுகாமம் பகுதியில் பஸ் மோதியதில் ஏழு வயதுடைய பி.கவிசேக் என்னும் சிறுவன் உயிரிழந்துள்ளார்.
06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை தாயும் இரு பிள்ளைகளுமாக (வயது 07 மற்றும் 11) மகோயாவுக்கு சென்று பிற்பகல் 01.00 மணியளவில் அங்கிருந்து மீண்டும் பஸ்ஸில் உறுகாமம் வந்து இறங்கும் போது முதலில் 07, வயதுடைய மகனை இறக்கி வீதியோரம் நிறுத்திவிட்டு, மற்றய பெண் (11) பிள்ளையை இறக்குவதற்காக தாய் பஸ்ஸினுல் ஏறியபோது, வீதியோரமாக நின்ற மகன் பேருந்துக்கு முன்பாக சென்று வீதியை கடந்து செல்ல ஓடுகையில், பின்னால் வந்த தனியார் பஸ் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகிய நிலையில் கரடியனாறு வைத்தியசாலைக்கு கொண்டு சென்று மேலதி சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்கையில் ஏறாவூர் பிரதேசத்தில் வைத்து மரணமானதால் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
மரணமடைந்த சிறுவன் புவனேஸ்வரன் கபிசேக் (07) என அடையாளம் காணப்பட்டது.
கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுகோளுக்கமைய சம்பவ இடத்துக்கு சென்ற மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிசாரை பணித்தார்.