கால வரையறையின்றி மூடப்பட்டது கிழக்குப் பல்கலைக்கழகம்கிழக்கு பல்கலைக்கழகம் திருகோணமலை வளாகத்தில் உள்ள தொடர்பாடல் மற்றும் வணிகக் கல்வி கற்கைகள் பீடம் கால வரையறை இன்றி மூடப்பட்டுள்ளது.

இன்று முதல் மறு அறிவித்தல் வரை குறித்த பீடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பீடாதிபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்பாடல் மற்றும் வணிகக் கல்வி கற்கை பீட மாணவர்கள் கடந்த மாதம் முதலாம் திகதி முதல் கற்றல் நடவடிக்கைகளை புறக்கணித்து வருவதாகவும்அதனை முடிவுக்கு கொண்டுவர பல்கலைக்கழகம் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட போதிலும் மாணவர்கள் தொடர்ந்தும் கல்வி நடவடிக்கைகளை புறக்கணித்து வருவதனால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.