சின்னக் கதிர்காமம் என அழைக்கபடும் தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவம்



கிழக்கிலங்கையில் பிரசித்சித்திபெற்றதும் தொன்மை வாய்ந்ததும் ஆடகசவுந்தரி அரசியாலும் முற்காலத்து முனிவர்கள் பலராலும் 'தாண்டகிரி' என்று பெயர் சூட்டி அழைக்கப்பட்டதும் தற்காலத்தில் சின்னக்கதிர்காமம் அழைக்கப்படுவதும் செந்நெல் விளை நிலங்களினாலும் அழகிய மலைத்தொடர்களினாலும் சூழப்பெற்று இயற்கை எழில் நிறைந்ததும் வராற்று சிறப்புமிக்கதுமான

தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 07.07.2018ம் திகதி சனிக்கிழமை காலை 08.00 மணிக்கு திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் 28.07.2018ம் திகதி சனிக்கிழமை காலை 06.00 மணிக்கு தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறவிருக்கின்றது.

இருபத்தியொரு நாட்கள்  திருவிழாக்களும் விஷேட பூசை ஆராதனைகளும் இடம்பெறும்.

கிரியைகள் அனைத்தும் சிவஸ்ரீ மு.கு.சிதானந்தக் குருக்கள்  மற்றும் சிவஸ்ரீ பு.நவரூபன் குருக்கள் ஆகியோரினால் நடத்தப்படவிருக்கின்றது.