நல்லாட்சி அரசாங்கத்தில் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை- தலைவர் கலாபூசணம் மீரா எஸ்.இஸ்ஸடீன்


(சா.நடனசபேசன்)
நல்லாட்சி அரசாங்கத்தில் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு என்று பேசப்படுகின்றபோதும் உண்மைச் சம்பவத்தை வெளிப்படுத்திய ஊடகவியலாளருக்கு நாவிதன்வெளிப் பிரதேசசபையின் பிரதித் தவிசாளர் அச்சுறுத்தியமை ஊடக சுதந்திரத்தினை குழிதோண்டிப் புதைக்கும் செயற்பாடாகும். இதனை நாம் வன்மையாக் கண்டிக்கின்றோம். என அம்பாரைமாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் கலாபூசணம் மீரா எஸ்.இஸ்ஸடீன் தெரிவித்தார்.

உண்மைச் சம்பவத்தை ஆதாரங்களுடன் வெளிப்படுத்திய நாவிதன்வெளி ஊடகவியலாளர் முஸ்தபாவிற்குஇ நாவிதன்வெளி பிரதேச சபை உதவித் தவிசாளர் ஏ.கே. சமட் தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்துள்ளமையினைக் கண்டித்து அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாவிதன்வெளிப் பிரதேசத்திலுள்ள சாளம்பைக்கேணி-4 கிராமசேவகர் பிரிவில் குழாய் பொருத்தப்படாத இடங்களில் குடிநீர்த்தட்டுப்பாடு நிலவுவதைஇ சாளம்பைக்கேணி- 4 அல்-குறைசியா இளைஞர்கழகம் நாவிதன்வெளிப் பிரதேச சபைத் தவிசாளரின் கவனத்திற்கு கொண்டு வந்தததையிட்டு குறிப்பிட்ட பிரதேசங்களில் நாவிதன்வெளிப் பிரதேச சபையினால் நீர்த்தாங்கிகள் வைக்கப்பட்ட வவுச்சர் மூலம் நீர்நிரப்பிக் கொடுக்கப்பட்டது.

இவ்விடயத்தை அல்-குறைசியா இளைஞர்கழகம் நாவிதன்வெளி ஊடகவியலாளரான எம்.ஏ.ஆர்.எம்.முஸ்தபா அவர்களிடம் தெரிவித்தனர். இச்செய்தி கடந்த வெள்ளிக்கிழமை (08ஊடகங்களில்  வெளியிடப்பட்டது.

இச்செய்தி குறித்து நாவிதன்வெளி பிரதேச சபையின் உதவித் தவிசாளர் ஏ.கே. சமட், நாவிதன்வெளி ஊடகவியலாளரான எம்.ஏ.ஆர்.எம்.முஸ்தபாவிற்கு தொலைபேசியின் மூலம் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

 குறிப்பிட்ட இப்பிரதேசங்களுக்கு நானே நீர் வழங்கியுள்ளேன், என்னுடன் மோதவேண்டாம், மோதினால் என்ன நடக்கும் என்று சொல்லமாட்டன் என அச்சுறுத்தல் .விடுத்துள்ளார். இவ்வச்சுறுத்தல்   ஊடக சுதந்திரத்திற்கு விடுக்கும் சவாலாகும் 

மக்களின் தேவைகளையும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் விடும் தவறுகளையும் ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டும் போது அதனைச் சகிக்க முடியாத பலர் இவ்வாறான அச்சுறுத்தல்களை வழங்குவது ஊடக சுதந்திரத்தினை மீறும் செயலாகும்.

கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் உண்மைச் சம்பவங்களை பக்கச்சார்பின்றி வெளியிடுவதில் அச்சம் கொண்டனர் இன்று நல்லாட்சி அரசாங்கத்தில் ஊடகவியலாளர்கள் பாதுகாக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றபோதும்   பிரதித் தவிசாளர் இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்தமையினை கண்டிப்பதுடன் உடனடியாக அவரது கட்சித்தலைமை நடவடிக்கை எடுப்பதுடன் பொலிஸாரும் அவரை விசாரணை செய்து அவருக்கான தண்டனையினை வழங்காவிடின் ஊடகவியலாளர்கள் அவருக்கு எதிராக நாவிதன்வெளிப்பிரதேசசபைக்கு முன்னால் போராட்டங்களை நடாத்துவோம் என அவர்  மேலும் தெரிவித்தார்