மட்டு அரச அதிபரின் முயற்சியால் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் கையளிப்பு


புத்தளம் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தால் சுமார் இருபது இலட்சம்  ரூபா பெறுமதியான  உலர் உணவு பொருட்களை சேகரித்து வழங்கப்பட்டது. 

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரின் முயற்சியில் இம்மாவட்டத்திலுள்ள பிரதேச செயலங்கள் மூலம் பிரதேச செயலாளர்களின் பங்களிப்பில் இந்த நிவாரணபொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க ஊடகப்பிரிவுத்தகவல் தெரிவிக்கின்றது.

அரிசி, மாவு, சீனி, மீன் டின், பருப்பு, விஸ்கட். குடிநீர் போத்தல்கள், பெற்சீற்கள்,  அடங்கிய இந்த நிவாரணப் பொருட்களை  மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் உத்தியோகபூர்வமாக மாவட்ட செயலக வளவிலிருந்து புத்தளம்  மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பி வைத்தார்.

இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்த், உதவி மாவட்டச் செயலாளர் ஏ.நவேஸ்வரன், உட்பட பிரதேச செயலார்கள், மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் பிரிவு உத்தியோகத்தர்களும்  பிரசன்னமாகியிருந்தனர் .

இந்த நிவாரணப்பொருட்களை உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன், போரதீவு பற்று பிரதேச உதவிப்பிரதேச செயலாளர் எஸ்.புவனேந்திரன் தலைமையிலான உத்தியோகத்தர்கள் குழுவின் எடுத்துச் சென்று புத்தளம் கல்பிட்டி பிரதேச செயலகத்தில் வைத்து இந்த நிவாரணப் பொருள்களை கையளித்தனர்.