மட்டக்களப்பு உட்பட மக்களுக்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ள செய்தி..!!


இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 24 ஆயிரத்து 518 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் இந்த ஆண்டில் 23 டெங்கு மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் 4 ஆயிரத்து 176 என்ற அதிகபட்ச டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளன.

இதனை அடுத்து மட்டக்களப்பு மாவட்டத்திலும், கம்பஹா மாவட்டத்திலும் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் ஏற்படும் போது, தற்காலிக நிவாரணத்தை தேடாமல், உடனடியாக வைத்தியரை நாடுமாறு மருத்துவத் தரப்பினர் அறிவுறுத்தியுள்ளனர்.

அத்துடன் காய்ச்சல் ஏற்படுகின்றவர்கள் கட்டாயமாக ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் பாடசாலைகள் அல்லது வேலைத்தளங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.