அமெரிக்காவில் சிக்கலில் மாட்டிய இலங்கை அகதி குடும்பம்! ஆபத்திலிருந்தவருக்கு உதவியதால் வந்த வினை !!


முக்கியமான அரசாங்க தகவல்களை கசியவிட்டர் என அமெரிக்க அரசால் தேடப்படும் Snowden என்ற நபருக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக நாடு கடத்தப்படும் அபாயத்திலிருக்கும் ஒரு இலங்கை அகதிகள் குடும்பம், கடைசியாக கனடா உதவுமா என காத்திருக்கிறது.

Supun Kellapatha, அவரது மனைவி Nadeeka Dilrukshi மற்றும் அவர்களது ஆறு மற்றும் இரண்டு வயதுள்ள இரண்டு குழந்தைகள், எப்போது இலங்கைக்கு நாடு கடத்தப்படுவோம், எப்போது கொல்லப்படுவோம் என்னும் அச்சத்திலேயே வாழ்கிறார்கள்.

நாம் ஏன் மற்றவர்களைப்போல் வெளியில் செல்லக்கூடாது, எப்போதும் ஏன் மற்றவர்கள் கவனமாக இருங்கள் என்று தன் பெற்றோரைப் பார்த்துக் கூறுகிறார்கள் என்னும் குழந்தைகளின் கேள்விகளுக்கு Supun Kellapathaவுக்கோ அவரது மனைவிக்கோ பதில் கூற இயலவில்லை.

Oliver Stone என்னும் நபர் எடுத்த ஆவணப்படம் ஒன்றில் Snowdenக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் தொடர்பான விவரங்கள் வெளியானதையடுத்து Kellapatha குடும்பம் உட்பட ஏழு பேருக்கு தொல்லை ஆரம்பித்தது.

அவர்கள் தொடர்ந்து அதிகாரிகளால் தேடப்பட்டார்கள்.

ஹாங்காங்கில் அவர்கள் புகலிடத்திற்காக விண்ணப்பித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதையடுத்து அவர்களது வழக்கறிஞர்கள் கனடாவுக்கு புகலிடம் கோரி விண்ணப்பித்தார்கள்.

அவசர விண்ணப்பங்களாக கருதப்பட்டு அவர்களது விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாவிட்டால் அவர்கள் இன்னும் மூன்றாண்டுகள் காத்திருக்க நேரிடும்.

இந்நிலையில் கனடா தங்களுக்கு விரைந்து உதவுமா, தங்கள் உயிர்கள் தப்புமா என்று திகிலுடன் காத்திருக்கிறது அந்தக் குடும்பம்.

இதற்கிடையில் Snowden அகதிகள் என்று அழைக்கப்படும் இந்த அகதிகள் குறித்து கனடா முடிவெடுப்பதில், அமெரிக்கா அழுத்தம் கொடுக்கலாம் என்னும் தகவல்களும் கிடைத்திருப்பதால் Kellapatha குடும்பத்தினர் உட்பட ஏழு பேரின் தலையெழுத்து என்னவாக முடியுமோ என்னும் அச்சம் ஏற்பட்டுள்ளது.