கிரான்குளம் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு



கிரான்குளம் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயமானது பந்தல் ஆலயமாக அமைந்து பல தேசத்து பல்லின மக்களும் வழிபடும் ஆலயமாக திகழ்ந்து வருகின்றது. இந்த ஆலயத்தில் மூலமூர்த்தியாக ஆஞ்சநேயரும், துணை தெய்வங்களாக பேச்சியம்மனும், நாக கன்னியும் இருந்து வருகின்றது. இவ்வாலயமானது பல நூற்றுக்கணக்கான குழந்தை வரங்களும் வழங்கி, பல்வேறு விதமான நோய்களையும் தீர்த்து, பல அற்புதங்களை செய்து எல்லா தேசத்து மக்களின் மனங்களிலும் இடம்பிடித்த பந்தல் ஆலயமாக இருந்து வருகின்றது.

தற்போது இவ் ஆலயமானது எல்லா தேசத்து மக்களுக்கும் உரிய ஆலயமாக வரையப்பட்டு பொதுக்கோயிலாக பிரகடனப்படுத்தப்பட்டு மிகப் பிரமாண்டமான ஆலயமாக அமைப்பதற்குரிய அடிக்கல் (26.08.2018) பல நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள்,  மத குருமார்கள், ஆசாரிகளால் நடப்பட்டது.