அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் ; திருவிழா நிகழ்வுகள் (வீடியோ - படங்கள்)



(சிவகுமார், சசி ,புவி, ஜிது)
கிழக்கிலங்கையின் வரலாற்றுப் புகழ்பெற்ற மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் சனிக்கிழமை  (11.8.2018) மதியம் 12.00 மணியளவில் மிக சிறப்புடன் நடைபெற்றது.

ஆலய பிரதம குரு சிவஶ்ரீ ஆதி சௌந்ததராஜ குருக்களின் தலைமையில் நடைபற்ற தீர்த்தோற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் பிதிர்களுக்காகா ஆத்மா சாந்தி வேண்டியும், தங்களது நேர்த்தியின் பொருட்டும் தானம் செய்து, தர்ப்பை அணிந்து புண்ணிய தீர்த்தமாடினர்.

ஆஞ்சநேயர் உதவியுடன் இராம பிரானால் இலிங்க பூஜை செய்யப்பட்ட இப் புண்ணிய மூர்த்தி, தலம் மற்றும் தீர்த்த பெருமை கொண்ட இவ் ஆலயத்தில் பழம் காலந்தொட்டு இன்றுவரை அடியார்கள் பக்கதி சிரத்தையுடன் தீர்த்தமாடி பிறவிப்பயனை அடையவேண்டி பிரார்த்திக்கின்றனர்.

கடந்த 02ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் வெள்ளிக்கிழமை (10) இரத உற்சவம் நடைபெற்று சனிக்கிழமை (11) ஆடி அமாவாசை தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெற்றது.