அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் சீரடி சாய் கருணாலய அடிக்கல் நாட்டு விழா



(ரவிப்ரியா)

வற்றாத வளங்கள் நிறைந்த திருக்கோவில் பிரதேசத்தில் கருணை மார்க்கம் நிலைபெறவும்; சாந்தி சமாதானம் வேரூன்றவும் மக்கள் பசிபட்டினியின்றி சந்தோசமாக இருப்பதற்கும் சிரடி பாபாவின் அருட்கடாட்சம் எங்கும் பரவி ஒளி பரப்பவும் அவரின் கொள்கை வழி நின்று சீரடிபாவாவை அவருக்கு பிடித்தமான இந்தியாவின் சீரடி கிராமத்தை நினைவு கூர்ந்து அதேசாயலில் உள்ள பற்றைகளும் புதர்களும் நிறைந்த அமைதியான இடத்தை அடையாளம் கண்டு அவர் சித்தப்படியே அவரை பிரதிஸ்டை செய்துவைத்த சீதா விவேக்; தம்பதிகளும் பிள்ளைகளும்பாக்யவான்கள்.

அவர்களின் தாராள மனது சீரடி சாயியின் உள்ளார்ந்த திட்டங்களுக்குப் பணிந்து தங்கள் சொந்தப் பணம் சொரிந்து சீரடி சாயிக்கு ஆலயம். அன்னதானமண்டபம், தியான மண்டபம், முதியோர் இல்லம். இலவச வைத்தியசாலை, மாணவர்கள் தங்கி கல்வி பயிலக் கூடிய விடுதி என்ற எதிர்கால சமூகநலன்களை மையப்படுத்தி திட்டமிடலுடன், 100 ஆண்டகளக்கு முன் சமாதியடைந்த சீரடி சாயியை மீண்டும் இப் பிரதேசத்தில் உலாவரச்செய்திருக்கின்றார்கள்.

ஆலயத்திற்கான அடிக்கல் நடும் பொன்னான நாளாக இன்றைய நாள் அமைந்தது என்பதில் மாற்றுக் கருத்தக்கு இடமில்லை. சீரடி சாயி வேம்புமரத்தின் கீழ் இருந்துதான் சிறுவராக இருந்தபோது தியானம் செய்வாராம். ஆதை நினைவு படுத்தவதுபோல் இங்க வளாகத்தின் நுழைவாயிலில்அவரை பிரதிஸ்டை செய்ய இடத்திற்கு அருகில் பசுமையான செழிப்பான வெம்பு மரம் சொல்லி வைத்தாற்போல் அமைந்திருப்பது அதிஸ்டவசமானது என்று சொல்வதைவிட அதுவே அருட்கடாட்சமாக அமைந்துவிட்டது.

அந்தவகையில் பார்க்கும்போது இந்தியாவின் சீரடி என்ற கிராமம் அப்படியே இலங்கைக்கு வந்தவிட்டது என்றே எண்ணத் தோன்றகின்றது. எனவேசீரடிபாவாவும் இங்கே வந்துவிட்டார் என்ற நம்பிக்கை உறுதிப்படுத்தப்படுகின்றது. அதற்கான உத்தரவாதத்தை இந்த கைங்கரியம் மூலம் திருமதிசீதா விவேக் உறுதிப்படுத்தியள்ளார். ஆதிதிகள் வாய் மலர்ந்தது போல் இது புண்ணிய பூமியாக புனிதம் பெறும் என்பது அதன் நடவடிக்கைகள் விரிவுபட்டுச் செல்லம்போது நடக்கவே செய்யும். இப்பிரதேசமும் மறுமலர்ச்சி பெறும். யுத்தத்தினால் பாதிக்கப்படட இப் பிரதேச மக்களுக்கு ஒருவிமோசனமாகவும் இது அமையும்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள திருக்கோவில் பிரதேசத்தில் 10 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட வளாகத்தில் அமையவுள்ள சீரடி சாய் கருணாலய அடிக்கல் நாட்டுவிழா 16ந்திகதி வியாழக்கிழமை காலை ஸ்தாபக தலைவி திருமதி சீதா விவக் தலைமையில் நடைபெற்றபோது;. ஆதிதிகள்வர வேற்கப்பட்டனர். முன்னதாக சீரடி சாயியின் திருவுருவம் பிரதிஸ்டை செய்யப்பட்டு பக்தர்கள் மலரஞ்சலி செலத்தும் நிகழ்வு அமைதியாக நடைபெற்றது.

பிரதம விருந்தினராக கலந்துகொண்ட அம்பாறை மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன்;. ;ஸ்தாபக தம்பதிகள் சீதா விவேக், இலங்கை நிலைய தலைவர் எஸ்.என். உதயநாயகம் ஆகியோருடன். இந் நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக திருக்கோவில் பிரதேச செயலாளர் ரி.அதிசயராஜ் அட்டாளைச்சேனை பிரதேசசெயலாளர் டாக்டர் பி.மோகனகாந்தன், திருக்கோவில் வலய கல்விப் பணிப்பாளர் திருமதி என்.புள்ளநாயகம். திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எஸ்.கே.பண்டார. ;ஆன்மீக அதிதிகளாக மட் கல்லடி காயத்திரிபீட சிவகரிகதாவாரி.முத்தமிழரசு, சிவயோகச் செல்வன் சிவஸ்ரீ சாம்பசிவ சிவாச்சாரியார், அக்கரைப்பற்று வி. ஜயராம மஹா விஹாரை வண தேவகொடசொறத்த தேரர் ஆகியோரும் மற்றும் பிரமுதர்களும் அடிக்கல்லை நட்டு வைத்தனர்.