வாழைச்சேனை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய உற்சவ நில்கழ்வுகள்


மட்டக்களப்பில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான  வாழைச்சேனை புதுக்குடியிருப்பு அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய ஆடிப்பூர பிரமோற்சவ பெருவிழாவின் இறுதி நாளாகிய இன்று அதிகாலை பக்தர்களின் தீ மிதிப்புடனும்  அம்பாளின் தீர்த்தோற்சவத்துடனும் இனிது நிறைவு பெற்றது.

பாசிக்குடா கடற்கரைக்கு அடியார்கள் புடைசூழ ஆலயத்தில் இருந்து அம்பாள் கல்குடா வீதி வழியாக ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கடற்கரையில் விசேட பூசை நிகழ்வுகள் இடம்பெற்று தீர்த்தோற்சவம் நடைபெற்றது.

04.08.2018 சனிக்கிழமையன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா தொடாந்து 9 நாட்கள் நடைபெற்றது.

ஆலய தலைவர் மட்டக்களப்பு  பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தலைமையில்  ஆலய நிர்வாக நடவடிக்கைகள் இடம்பெற்றதுடன் மகோற்சவ பிரதம குரு சிவாகம கிரியா ரெத்தினம் பிரம்மஸ்ரீ நா.ஹரிந்திர குருக்கள் தலைமையில் மகோற்சவ திருவிழாக்கள் அனைத்தும் இனிதே நடைபெற்றது.