கிரான் பிரதேசத்தில் 'மீனம் சிறுவர் பூங்கா திறந்துவைப்பு

-மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட    'மீனம் சிறுவர் பூங்கா' சம்பிரதாயபூர்வமாக திறக்கப்பட்டுள்ளது.

கோரளைப்பற்று பிரதேசசெயலகப் பிரிவிற்கு உட்பட்ட    சிறுவர் கழகங்கள் மத்தியிலான விளையாட்டுவிழாவும்    கிரான் கருணா மைதானத்தில்    வெகுகோலாகலமாக நடைபெற்றது.


சிறுவர்களது திறன்களை ஊக்குவிக்குமுகமாகவும்      சிறுவர் கழகங்கள், சம்மேளனத்தினை வலுப்படுத்தும் முகமாகவும் கிரான் பிரதேசசெயலகம், கருணாவிளையாட்டுகழகம், வேள்;ட் விஷன் நிறுவனத்துடன் இணைந்து மீனம் சிறுவர் பூங்காதிறப்பு விழாவினை முன்னிட்டு இந்த விளையாட்டுவிழாவினை ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வானது சிறுவர்கள் விளையாடுவதற்கான உரிமையை பரிந்துரைத்ததுடன் 'சிறுவர்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்போம்' என்ற தொனிப்பொருளில் (endviolence against children ) EVAC) தேசிய தொடரணியில் பங்களிப்பு செய்யும் முகமாக கையெழுத்துச்சேகரிப்பும் நடைபெற்றது.

மற்றும் மெய்வல்லுநர் திறனாய்வு மற்றும் கயிறிழுத்தல் வினோதஉடை போன்ற பாரம்பரிய விளையாட்டுக்கள் இதன்போது நடைபெற்றன. வெற்றிபெற்றவர்களுக்கு பெறுமதியான பரிசில்களும் வழங்கப்பட்டன.

கோரளைப்பற்று தெற்கு பிரதேசசெயலாளர் எஸ். ராஜ்பாபு, கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் சோபா ஜெயரஞ்சித், வேள்ட் விஷன் கிரான் அபிவிருத்தித்திட்ட முகாமையாளர் ஹிந்து றோஹாஸ் குமாரஸ்வாமி, மாவட்ட விவசாய பிரதிப் பணிப்பாளர் வி.பேரின்பராஜா, கோரளைப்பற்று பிரதேசசெயலக ஊழியர்கள்,பிரதேச சபை உறுப்பினர்கள், சமூகதலைவர்கள் மற்றும் கருணா விiயாட்டுக்கழக பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.