கிழக்குப் பல்கலைக்கழக பொதுப் பட்டமளிப்பு விழா



(சிவகுமார்)
கிழக்குப் பல்கலைக்கழக பொதுப் பட்டமளிப்பு விழா 2018.09.15 சனிக்கிழமை வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக நல்லையா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது. நான்கு கட்டங்களாக நடைபெற்ற இப் பட்டமளிப்பு விழாவில் 927 பேர் தங்களுக்கான பட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.

காலை 8:30 மணிக்கு ஆரம்பமான முதலாம் கட்ட பட்டமளிப்பு நிகழ்வில் 209 பேர் பட்டங்களைப் பெற்றனர்.

  1. தத்துவவியல் முதுமாணி -கலை (M.Phil - Arts ) - 3 
  2. கல்வி முதுமாணி (M.Ed) - 1 
  3. தத்துவவியல் முதுமாணி -விஞ்ஞானம் (M.Phil - Science) - 1
  4. வியாபார நிர்வாக முதுமாணி (M.BA) - 8 
  5. பொருளாதார அபிவிருத்தி முதுமாணி (Master of Development Economics) - 17 
  6. பட்டப்பின் முகாமைத்துவ டிப்ளோமா (PGD in Management) - 3 
  7. வியாபார நிர்வாக இளமாணி (B.BA) - 66 
  8. வணிக இளமாணி (B.Com) - 54 
  9. விஞ்ஞான இளமாணி (B.Sc) - 56  

மு.ப 11:30 மணிக்கு ஆரம்பமான இரண்டாம் கட்ட பட்டமளிப்பு நிகழ்வில் 217 பேர் பட்டங்களைப் பெற்றனர்

  1. மருத்துவ இளமாணி மற்றும் சத்திரசிகிச்சை இளமாணி (MBBS) - 1, 
  2. தாதிய விஞ்ஞான இளமாணி (B.Sc in Nursing) - 16, 
  3. விவசாய விஞ்ஞான இளமாணி (B.Sc in Agriculture) - 5, 
  4. முகாமைத்துவ விஞ்ஞான இளமாணி (B.Sc in Management - Trinco Campus) - 15, 
  5. தொடர்பாடல் கற்கைகள் கலை இளமாணி (BA in Communication Studies - Trinco Campus) - 12, 
  6. மொழிகள் கலை இளமாணி (BA in Languages - Trinco Campus) - 1, 
  7. பொதுக் கலை இளமாணி (BA- General) - 167

பி.ப 2:30 மணிக்கு ஆரம்பமான மூன்றாவது கட்ட பட்டமளிப்பு நிகழ்வில் 251 பேர் பட்டங்களைப் பெற்றனர்,

  1. சிறப்புக் கலை இளமாணி (BA - Special) - 111, 
  2. கல்வியியல் இளமாணி (B.Ed) - 8, 
  3. இசை நுண்கலை இளமாணி - சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம் (BFA in Music - SVIAS) - 48, 
  4. நாட்டிய நுண்கலை இளமாணி - சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம் (BFA in Dance - SVIAS) - 34, 
  5. கட்புல தொழினுட்பவியல் கலை நுண்கலை இளமாணி -சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம் (BFA in Visual Tech - SVIAS) - 50 

இறுதியா நான்காவது கட்ட பட்டமளிப்பு நிகழ்வு மாலை 5:00 மணிக்கு ஆரம்பமாகியது இதில் 250 பேர் பட்டங்களைப் பெற்றனர்

  1. நாடகமும் அரங்கியலும் நுண்கலை இளமாணி (BFA in  Drama and Theatre) - 39, 
  2. கலை இளமாணி -வெளிவாரி (BA - External) - 190, 
  3. வியாபார நிர்வாக இளமாணி- வெளிவாரி (B.BA - External) - 15, 
  4. முகாமைத்துவ விஞ்ஞான இளமாணி - வெளிவாரி, திருகோணமலை வளாகம் (B.Sc in Management - Trinco Campus) - 1, 
  5. கலை இளமாணி - வெளிவாரி, திருகோணமலை வளாகம் (BA - External, Trinco Campus) - 5