வெல்லாவெளியில் காட்டுயானையில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கில் யானைவேலி அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது



(க. விஜயரெத்தினம்)
வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் யானை வேலி அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பிரதேச செயலாளர் செல்வி.ஆர் ரகுலநாயகி தெரிவித்தார்.

வெல்லாவெளி பிரதேசசெயலாளர் யானைவேலி அமைப்பது விடயமாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:-உலக வங்கியின் நிதியொதுக்கீட்டின்
"விவசாய நவீன மயமாக்கல்" திட்டத்தின்மூலம் விவசாய கிராமங்களை பாதுகாத்தல் மூலம் இவ்வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

வனவல பாதுகாப்பு திணைக்களமும், வெல்லாவெளி பிரதேச செயலகமும் இணைந்து யானைவேலியை அமைப்பதை நடைமுறைபடுத்தவுள்ளது.
வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் செவ்வாபுரம் கிராம சேவையாளர் பிரிவிலிருந்து மாலையர் கட்டு கிராம சேவையாளர் பிரிவு வரை இருபத்திரெண்டு (22) கிலோ மீற்றர் தூரத்திற்கு ரூபா15 மில்லியன் ரூபா செலவில் யானை வேலி அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக வனவள திணைக்கள அதிகாரிகள் மதிப்பீட்டறிக்கை மீளாய்வு செய்ய வேண்டும்; என்றும் வேலி அமைப்பதற்குரிய பொருட்கள் இல்லை என காரணம் காட்டுவதாக காணி பயன்பாட்டு திட்டமிடல் தும்பங்கேணி கிராமத்துக்கான கூட்டம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற போது கருத்து முன்வைக்கப்பட்டது. நிகழ்வில் அனைத்து திணைக்கள அதிகாரிகள் பங்கு பற்றியது குறிப்பிடத்தக்கதாகும்.இவ்வருடம் வேலையை ஆரம்பிக்க முதற்கட்டமாக 5 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

எது எவ்வாறாயினும் இந்த மாதத்திற்குள் மாத்திரம் இரண்டுபேர் யானை தாக்கி பலியாகியுள்ளமையும் யாவரும் அறிந்த விடயம். இவ்விடயம் தொடர்பாக உரியவர்கள் விரைவாக செயற்பட்டு குறுகிய காலத்தில் யானை வேலி அமைத்து யானை தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என கலந்து கொண்ட மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.