வின்சன், சிசிலியா பாடசாலைகளின் பாடுமீன் சமர் ஆரம்பம் !! நாணய சுழற்சியில் வெற்றி பெற்றது வின்சன் !


(வரதன்)
மட்டக்களப்பின் பிரபல பெண்கள் பாடசாலைகளான வின்சன்ட் தேசிய பாடசாலை மற்றும் சிசிலியா பெண்கள் பாடசாலைக்கிடையிலான 8வது பாடுமீன் சமர் இன்று காலை வெபர் மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பமாகியது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தியாகராஜா சரவணபவன் கலந்துகொண்டார். நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மட்டக்களப்பு வின்சன்ட் தேசிய பாடசாலை முதலில் பந்து வீச திர்மானித்துள்ளது.