கிழக்குப் பல்கலைக்கழக உள நலம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கண்காட்சி




கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தின் மருத்துவமாணவர்களினால் உள நலம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கண்காட்சி.

ரவிப்ரியா


உலக உள நல தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு உள நல நிலையம் மற்றும் வண்ணாத்துப் பூச்சிசமாதானப் பூங்கா இணைந்த்து நடாத்திய கண்காட்சி மற்றும் விழிப்பூட்டல் நிகழ்வில் கிழக்குப்பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தினுடைய மருத்துவமாணவர்களின் உள நலம் சம்பந்தமான தகவல்களும் சமூகத்தில் அதிகமாக காணப்படும் உளநலப்பிரச்சினைகள், அவை ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகள் என்பனநிகழ்வில் கலந்துகொண்ட பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களிற்கும்தெளிவுபடுத்தப்பட்டத்துடன் , இளைஞர் சமூகத்தின் மத்தியில் போதைப் பொருளின் பாதிப்பு,போதைப்பொருளில் இருந்து சமூகத்தினை எவ்வாறு மீட்கலாம் என்பது பற்றிய விளக்கங்களும்வழங்கப்பட்டிருந்தது.

சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தின் ஆரம்ப சுகாதார பிரிவினுடைய தலைவர் குடும்பவைத்திய நிபுணர் வைத்தியர் கந்தசாமி அருளானந்தம் அவர்களின் வழிகாட்டலில் நடத்தப்பட்ட இக்கண்காட்சிக் கூடத்தில் பலர் ஆர்வத்துடன் கலந் து பயனடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கவிடயமாகும்.