புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் முழுமையான விபரங்கள்.



2018ஆம் ஆண்டுக்கான 5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன.

அதன்படி, அகில இலங்கை ரீதியாக முதலாம் இடத்தை பிலியந்தல -சோமவீர சந்ரசிறி வித்தியாலயத்தைச் சேர்ந்த புமித் மெத்துனுல் வித்தானகேவும், வெயங்கொட - சென்.மேரிஸ் கல்லூரியின் குருகுலசூரிய சனுபா திமத் பெரேராவும் பெற்றுள்ளனர்.

அவர்கள் 199 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளனர்.

மூன்றாம் இடத்தில் ரெஜி ரணத்துங்க ஆரம்ப வித்தியாலயம் - மினுவங்கொடயைச் சேர்ந்த ஹெட்டியாராச்சி செனுஜி அக்கித்ம ஹெட்டியாராச்சி பெற்றுள்ளார்.

அதேநேரம், தமிழ் மொழி மூலம் முதலாம் இடத்தை இருவர் பகிர்ந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யாழ்.இந்து ஆரம்ப பாடசாலையின் மகேந்திரன் திகழொளிபவனும், சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த நவாஸ்கன் நதியும் 198 புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

இவர்கள் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளனர்.

தமிழ் மொழியில் இரண்டாம் இடத்தை வவுனியா சிவபுரம் ஆரம்ப பாடசாலையை சேர்ந்த பாலக்குமார் ஹரித்திக்ஹனுசுஜா பெற்றுள்ளார். அவர் 197 புள்ளிகளை பெற்றுள்ள நிலையில் அகில இலங்கை ரீதியில் அவர் 3ஆம் இடத்தைப் பெற்றுள்ளார்.

இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உன்னிச்சை 6 ஆம் கட்டை அரச தமிழ் கலவன் பாடசாலை மாணவன் செல்வன் ஜெ.துகிந்தரேஷ் 196 புள்ளிகளைப் பெற்று  மாவட்ட , மகாண மட்டத்தில் முதலிடத்தினையும் தேசிய ரீதியாக நான்காம் இடத்தினையும் பெற்று தனக்கும் பாடசலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.


புள்ளி விபரங்கள் குறித்த முழுமையான தகவல்கள் இதோ...