ஜனாதிபதி சாரணர் விருது பெற்ற மாணவிகளுக்கான சின்னம் அணிவிக்கும் நிகழ்வு


(கதிரவன் )

திருகோணமலை மாவட்டத்தில் 9 மாணவர்கள் ஜனாதிபதி சாரணர் விருதினை பெற்றுக் கொண்டுள்ளனர்.

சண்முக இந்து மகளிர் கல்லூரி 4,
மெதடிஸ்த பெண்கள் கல்லூரி 4;,
ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி 1.
இது வரை காலமும் 32 சாரணர்கள் இவ்விருதினை பெற்றுள்ளனர்.
ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி 19,
உவர்மலை விவேகாநந்தா கல்லூரி 9, புனித சூசையப்பர் கல்லூரி 2, பெருந்தெரு விக்நேஸ்வரா மகா வித்தியாலயம் 1,
செல்வநாயகபுரம் இந்து மகா வித்தியாலயம் 1,

ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரியில் ஜனாதிபதி சாரணர் விருது பெற்ற 4 மாணவிகளுக்கான சின்னம் சின்னம் அணிவிக்கும் நிகழ்வு புதன்கிழமை 2018.10.17 மாலை கல்லூரி சம்ந்தர் மண்டபத்தில் நடைபெற்றது. சாரணர்களின் பெற்றோர்கள் கல்லூரி நிர்வாகத்துடன் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.

திருகோணமலை வலய கல்வி பணி;ப்பாளர் ந.விஜேந்திரன், தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெயகௌரி இருவரும் பிரதம விருந்தினர்களாகவும், சண்முக இந்து மகளிர் கல்லூரி முந்நாள் அதிபர்  திருமதி சுலோசனா ஜெயபாலன், திருகோணமலை மாவட்ட சாரணர் ஆணையாளர் க.உமாபதிசிவம் ஆகியோர் கௌர விருந்தினர்களாகவும்; கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில்  15 சாரணர்களுக்கு மாவட்ட ஆணையாளர் கட்டிளையும்,  6 சாரணர்களுக்கு வனவாசிகள் கட்டிளையும் அணிவிக்கப்பட்டது.

2012ம் வருடம் இக்கல்லூரியில் 62 மாணவர்களுடன் சாரணர் குழு ஆரம்பித்து வைக்கப்பட்டது. திருகோணமலையின் 60வது சாரணர் குழுவாக  சண்முகா இந்து மகளிர் கல்லூரி விளங்குகிறது.