மட்டக்களப்பிலிருந்து புலம்பெயர்ந்த ஒருசிலர் மாத்திரமே மக்களுக்காக உதவி செய்கிறார்கள்

(வரதன்) மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து புலம்பெயர்ந்து மேற்கத்தேய நாடுகளுக்குச் சென்றவர்களில் ஒருசிலர் மாத்திரமே எமது மக்களுக்காக உதவிகளை செய்துகொண்டிருக்கிறார்கள் பலர் தாங்கள் இருக்கும் விலாசத்தையே மறைக்கிறார்கள என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.


மட்டக்களப்பு - பண்டாரியாவெளி அறிவாலயம் அமைப்பின் அனுசரணையில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை கொரவிக்கும் நிகழ்வில் பிரதமஅதிதியாக கலந்து கொண்டு அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.இவ் நிகழ்வுவானது கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

அறிவாலயம் ஆலோசகர் சி.பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நகிழ்வில் அறிவாலயம் நிறுவுனர் அலையப்போடி நல்லரெத்தினம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் - புலம்பெயந்து வாழுகின்ற வடமாகாணத்தைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மட்டக்களப்பு மக்களுக்கு பலவகையான உதவிகளைச் செய்கின்றார்கள். ஆனால் மட்டக்களப்பைச் சேர்ந்த அலையப்போடி நல்லரெத்தினம், போன்ற ஒரு சிலர் மாத்திரமே உதவிபுரிகின்றனர்.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வினை கடந்த காலங்களில் அறிவாலம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை இணைந்து நடாத்தி வந்தது. இதற்கான செவு முழுமையாக அலையப்போடி நல்லரெத்தினம் அவர்களினால் வழங்கப்படுவதனால் அவது ஆலோசனையின் பேரில் நிறுவப்பட்ட அறிவாயலம் தற்போது இந்த நிகழ்வினை நடாத்துகின்றது.

மட்டக்களப்பு மேற்கு வலயத்தைப் பொறுத்தவரை பல தேவைப்பாடுகள் காணப்படுகின்றன. ஆனால் எமக்க ஒதுக்கப்படுகின்ற நிதி போதாமல் உள்ளதுடன் பாடசாலைகளுக்கு பொருள் கொள்வனவுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யக்கூடாது எனவும் சுற்றுநிருபம் அனுப்பியுள்ளார்கள். இதனால் எங்களால் நிதி ஒதுக்கீடு மேற்கொள்வதில் சிக்கல் உள்ளது.பல்கலைக் கழகத்திற்கு சட்டத்துறை, விஞ்ஞானத்துறை மற்றும் கணிதத்துறைகளில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் என்னைத் தொடர்பு கொண்டால் அவர்களின் பல்கலைக் கழக கல்விக்கு முடியும் வரை உதவுவதற்குத் தயாராக உள்ளேன். கலை மற்றும் வர்த்தகத்துறைக்கு தெரிவு செய்யப்பட்ட வறிய நிலையிலுள்ள மாணவர்களும் தொடர்ப கொண்டால் அவர்களின் கல்விக்கா உதவுவதற்கு தயாராக உள்ளோம்' என்றாh