மட்டக்களப்பில் சர்க்கார் விஜய்யின் கட் அவுட் அகற்றப்பட்டது ! சீரழிக்கும் விடயங்களை அனுமதிக்க முடியாது

கல்லடி   சந்தியில்  நிறுத்திவைக்கப்பட்ட சர்க்கார் திரைப்படத்தின் கதாநாயகன் விஜய்யின்  பிரமாண்டமான ”கட்அவுட்”  மட்டு மாநகர மேயரின் நடவடிக்கைக்கு அமைய அகற்றப்பட்டுள்ளது.


நடிகர் விஜய் சிகரட் புகைக்கும் விதத்தைக் காட்சிப்படுத்தும் வகையில் அமைந்திருந்த மேற்படி கட்அவுட் புகைப்படமானது இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் தவறான எண்ணத்தை விதைப்பதாகவும் தவறான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற ரீதியில் கிடைக்கப்பெற்ற புகார்களுக்கு அமையவே மேற்படி கட்அவுட் அகற்றப்பட்டது  என மட்டக்களப்பு மாநகர மேயர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

இது பற்றி அவர் மேலும்தெரிவிக்கையில்

ஒருவருடைய மனதில் இலகுவில் பதிவாவது காட்சிகளும் அதனுாடான கருத்துக்களுமாகும்.

மனிதனின் மனம் சார்ந்ததின் வண்ணமாக மாறும். இவைகள் உளவியல் கூறும் உண்மைகள். ”கட்டவுட்டுக்கள்” நல்ல கருத்தக்களையும். சிந்தனைகளையும். அவற்றை பாரப்போரின் மனத்தில் பதிப்பிக்க வேண்டும்.

நடிகர் விஜய் ஒரு  சிறந்த நடிகா் அவர் எத்தனையோ நல்ல கருத்தக்ளை சமூகத்தில் விதை்துள்ளார். அவருக்கான ”கட்டவுட்டை”  நிர்மாணிப்பதற்கு முன்னால் அதை நிர்மாணிபவர்கள் சரியானதும், பொருத்தமானதும் சமூகம் ஏற்றுக் கொள்ளக் கூடியதுமான காட்சியை தெரிவு செய்து கட்டவுட்டை வடிவமைத்திருக்க வேண்டும்.

சினிமாக்காட்சிகள் சமூகத்தில் இலகுவாக இடம்பிடிப்பவை. விஜய் சிகரெட் புகைக்கும் காட்சியையா கட்அவுட்டுக்கு  தேர்ந் தெடுப்பது.

 இளைஞர்கள் சிகரெட் புகைக்க வேண்டும் என்ற கருத்தையா கட்டவுட் மூலம் சமூகத்திற்கு சொல்வது.

சிகரட் குடிப்பது புற்றநோயை ஏற்படுத்தலாம் என்ற விளம்பரங்களை சிகரெட்டை உற்பத்தி செய்யும் கம்பனிகளே  தமது உற்பத்தியில் அச்சிட்டு விற்பனை செய்யும்பொது.

 நம்மவர்கள் கட்டவுட் காட்சிப்படுத்தி சிகரட் புகைப்பதையா  காட்டுவது.

இந்தச் சாயல் சமூகத்தை சீரழித்துவிடும்.

தீங்குகளை ஏற்படுத்தும் விடயங்களுக்கு மாநகரசபை அனுமதிக்க முடியாது.

அதற்கு நாம் துணைபோகவும் முடியாது.கட்டவுட் நிர்மாணிக்கப்பட்டிருப்தை குடியிருப்பாளா்களே முதலில் எனக்கு  சுட்டிக்காட்டினா்கள்.

அதற்குப்  பிறகும் நான் நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது. இனிமேலாவது  திரையரங்குகளின் நிர்வாகம் சரியாக சிந்திக்க வேண்டும் என்றார்.