காணாமல் போன தொலைபேசிகளை கண்டுபிடிக்கும் நோக்கில் பொலிசாரினால் புதிய இணையத்தளம்


காணாமல் போன மற்றும் களவாடப்பட்ட கையடக்க தொலைபேசிகளை கண்டுபிடிக்கும் நோக்கில் முறைப்பாடுகளை மேற்கொள்வதற்காக புதிய இணையதளம் ஒன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

www.ineed.police.lk எனும் குறித்த இணையத்தளம் இன்று (11) பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால்ஆரம்பித்து வைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.


குறித்த இணையதளத்தின் வழியாக தங்களது விபரங்களை பதிவு செய்து அதனூடாக தங்களது காணாமல் போன அல்லது களவாடப்பட்டு கையடக்க தொலைபேசிகளின்  விபரங்களை வழங்குவதன் மூலம் அதனை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.