மட்டக்களப்பு மாவட்டத்தில் க.பொ.த. சாதாரணதர பரீட்சை அமைதியான முறையில் ஆரம்பம்


மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை கல்விப்பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை மாவட்டத்தில் 5 கல்வி வலயங்களிலிருந்து 22803 பேர் தோற்றுகின்றனர் இதற்காக 293 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. .பரீட்சை நிலையங்களில் அமைதியான் முறையில் பரீட்சைகளை நடாத்த வேண்டிய நடவடிக்கைகளை கல்வி அமைச்சு முன்னெடுத்துள்ளது.

சகல பரீட்சை நிலையங்களில் கையடக்க தொலைபேசி எடுத்து செல்லல் தடை செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக பரிட்சை மேற்பார்வையானர்கள் கடமைக்கு நியமிக்கப்பட்டுள்ளதுடன் பிற கல்வி வலயங்களில் பணியாற்றும் அதிகாரிகள் இம்முறை நகர பாடசாலைகளுக்கு கடமைகளுக்காக அமர்த்தப்பட்டுள்ளனர்.இதேவேளை 

க.பொ.த.சா தர பரிட்சைக்கு தோற்றும் மாணவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிலித்துக்கொண்டதுடன் உற்சாகமாக இன்று காலை சமய பாட பரீட்சைக்கு சமுகமளித்தனர்.பிற்பகல் தமிழ் பாடப்பரீட்சை இடம்பெறவுள்ளது.மாவட்டத்தின் 05 கல்வி வலயங்களிலும் இன்று காலை அமைதியான முறையில் பரீட்சை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.