பாடுமீன்கள் ஆய்வாளர் பிரின்ஸ் காசிநாதருக்கு பல்துறைசார்ந்தோரால் இறுதியஞ்சலி


(சிவம்)

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபருமான பிரின்ஸ் காசிநாதரின் பூதவுடல் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) அவர் அதிபராக கடமையாற்றிய மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மண்டபத்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன் போது மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா உட்பட அரசியல் பிரமுகர்கள் முக்கியஸ்தர்கள் தமிழ் முஸ்லிம் பிரமுகார்கள் குடும்பத்தினர் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு சிறந்த ஊடகவியலாளராக  செயற்பட்ட தோடு  மட்டக்களப்பின் தனிச்சிறப்பான பாடுமீன்கள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு அது தொடர்பிலான தகவல்களை சர்வதேசத்திற்கு கொண்டுசென்ற பெருமை மற்றும்1990  களில் நாட்டில் இடம்பெற்ற கொடூர யுத்த காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட் டு கைதுசெய்யப்பட்டபோது படையினருடன்  போராடி பல உயிர்களை மீட்டு க்கொடுத்த பெருமை அவரையே சாரும்.

அத்தோடு .பி.ஆர்.எல்.எப்.ஊடாக  பாராளுமன்ற உறுப்பினராக இருந்து அளப்பெரிய மக்களுக்கு தன்னலம் கருதாத சேவையாற்றியதால் மக்களின் மனதில் இடம் பிடித்தார் என அஞ்சலி உரை நிகழ்தியவர்கள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து பூதவுடன் மட்டக்களப்பு மெதடிஸ்த்த திருச்சபையினரால் பொறுப்பெற்கப்பட்டு செல்லப்பட்டு நல்லடக்க ஆராதனை இடம் பெற்று பின்னர் மட்டக்களப்பு ஆலையடிச்சோலை மையானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.