வடக்கு கிழக்குஅபிவிருத்தியில் தமிழ் தேசியகூட்டமைப்பின் ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்படும்

வடக்கு கிழக்கின் அபிவிருத்தி திட்டங்களின்போது இனிவரும் காலங்களில் அரசாங்கம், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஆலோசனைகளை முழுமையாக பெற்றுக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான இணக்கப்பாடு புதிதாக அமைக்கப்படவுள்ள ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கும் இடையில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி வடக்குகிழக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள எந்தவொரு திட்டத்திலும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பங்கு இருக்கும் என்று இணங்கிக்கொள்ளப்பட்டுள்ளது.எனினும் அரசாங்கத்தின் அமைச்சுப்பொறுப்புக்களில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை பங்கேற்காது என்று கட்சித்தரப்புக்கள் தெரிவித்துள்ளன.


இதேவேளை புதிய அரசாங்கம் பதவியேற்கும் நிலையில், அதுவும் இந்த வருடத்துக்குள்ளே பொதுத்தேர்தல் ஒன்றுக்கு தயாராகும் என்ற கருத்துக்கள் வெளியாகியுள்ளன.பொதுஜன ஐக்கிய கூட்டமைப்பை  பொறுத்தவரையில் அது எதிர்வரும் ஏப்ரலுக்குள் பொதுத்தேர்தல் ஒன்றுக்கு செல்லவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிறது.