கல்முனை நகரில் அம்பாறை மாவட்ட செயலகத்தின் தைப் பொங்கல் திருவிழா



(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

அம்பாறை மாவட்ட செயலகத்தின் பிரதான தைப் பொங்கல் திருவிழா கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நேற்று(17) பிரதேச செயலாளர் ரி.ஜெ.அதிசயராஜ் தலைமையில் கல்முனையில் நடைபெற்றது.

கல்முனை ஸ்ரீ சித்தி தரவைப் பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து தமிழர்களின் பாரம்பரிய கலை கலாசார நிகழ்வுகளான மாட்டுவண்டி, கரகாட்டம், கும்மி வீதி ஊர்வலம் கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலகத்தை வந்தடைந்தது.

இதில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க கலந்து கொண்டார்

வீதி ஊர்வலத்தை தொடர்ந்து பிரதேச செயலகத்தில் மாதர் சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள், சமூக மைப்புக்கள், இளைஞர் கழகங்களின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலக உத்தியுhகத்தர்கள் ஏற்பாடு செய்த பாரம்பரிய முறையிலான நெல்குற்றி புத்தரிசியிட்டு பொங்கல் பொங்கும் நிகழ்வுகள் நடைபெற்றன.

கலாசார நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன் பிரதம அதிதி மற்றும் கௌரவ அதிதிகள் நினைவுச்சின்னம் வழங்கி பொன்னாடை போத்தி கௌரவிக்கப்பட்டார்கள்.

இந்த நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் திரு. கே.விமலநாதன், திறைசேரி முகாமைத்துவப் பிரிவின் மேலதிக பணிப்பாளர் கலாநிதி. எம்.கோபாலரெட்ணம் , பிரதேச செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள், மாவட்ட செயலகத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பிரதேச அரசியல் தலைவர்கள், மாநகரசபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.