சூடு பிடித்திருக்கும் தை பொங்கல் வியாபாரம்பாறுக் ஷிஹான்

விவசாயிகள் சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாளான தை பொங்கல் பண்டியையை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பண்டிகைக்கால வியாபாரம் சூடு பிடித்துள்ளது.

யாழ்ப்பாணம், திருநெல்வேலி, மருதனார்மடம், மற்றும் நகருக்கு அப்பால் உள்ள பகுதிகளிலும் பண்டிகைக் கால வியாபாரம் சூடு பிடித்திருப்பதை காணக்கூடியதாக உள்ளது.

குறிப்பாக யாழ்ப்பாணத்தின் பெரும் சந்தைகளி்ல் ஒன்றான திருநெல்வேலியில் தைப்பொங்கல் வியாபாரம் இம்முறை களைகட்டியுள்ளது.

திருநெல்வேலி சந்தையில் பொங்கலை முன்னிட்டு பொங்கலுக்கு தேவையான மண் பானை, அலுமினியப் பானைகள் வியாபாரிகளால் குவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் பொங்கலுக்குரிய பொருள்கள், கரும்பு, இஞ்சி, மஞ்சள் இலைகள் என்பன விற்பனை செய்யப்பட்டுவருகின்றன.

தைப்பொங்கலுக்கு மறுநாளான பட்டிப்பொங்கல் விழாவும் தமிழர் தாயகத்தில் விமர்சியாக இடம்பெறுவது வழமையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பட்டாசு விற்பனையும் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகள் அமோகமாக இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.