சீனாவின் நிதியுதவியுடன் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அபிவிருத்திப் பணிகள்



சீன அரசாங்கத்தின் 234 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் மட்டக்களப்பு ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகள் சுகாதார போஷனை மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தலைமையில் நேற்று 10.02.2019 ஆரம்பமானது..

இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானாவின் அழைப்பின்பேரில் சுகாதார போஷனை மற்றும் சுதேச வைத்தியத்துறை இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் மாகாண சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் எம்எஸ் சுபைர், மாவட்ட அரசாங்க அதிபர் எம். உதயகுமார் மற்றும் சுகாதார திணைக்கள அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்நிதியின் மூலம் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் நவீன வசதிகளைக்கொண்ட நோயாளர் விடுதி மகப்பெற்று விடுதி இரத்த வங்கி சத்திர சிகிச்சைக்கூடம் ஆரம்ப சிகிச்சைப்பிரிவு என்பன இங்கு அமைக்கப்படவுள்ளன.  அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் உள்ளிட்டோர் இங்கு பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.