மட்டக்களப்பு மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் சங்காபிசேகம்
மட்டக்களப்பு மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் சங்காபிசேகம் இன்று காலை 11 .30 மணிக்கு நடைபெற்றது ஆலய பிரதம குருக்களும் சிவஸ்ரீ .உ .ஜெயதீஸ்வரன் குருக்கள் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இச்சங்காபிஷேகத்தில் ஷ்ணவ்ன கும்பயாக பூசையுடன் நூற்றெட்டு சங்கு பூசை இடம்பெற்றது அதனைத்தொடர்ந்து அபிஷேகம் ,தீபாராதனை, கும்ப உள்வீதி சுற்றுதலுடன் விஷேட பூசைகளும் இடம்பெற்றன. இதில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்