தாழங்குடா றோ.க.த.க பாடசாலை செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழா



மட் /மட்/தாழங்குடா றோ.க.த.க பாடசாலை செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழா பாடசாலை அதிபர் அ.பிரபாகரன் தலைமையில் 01.02.2019 வெள்ளிக்கிழமை மாலை பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.

ஆன்மிக அதிதிகளாக தாழங்குடா திருமுழுக்கு யோவான் ஆலய பங்குத்தந்தை வண.பிதா.மரியன்தம்பி ஸ்ரனிஸ்லஸ், தாழங்குடா விநாயகனர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ கண்ணன் குருக்கள் ஆகியோரும் பிரதம அதிதியாக கோட்டக்கல்விப் பணிப்பாளரும், அகில இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத் தலைவருமான கே.நல்லதம்பி அவர்களும்.

கௌரவ அதிதிகளாக இறைவரித் திணைக்கள உதவி ஆணையாளர் ரி.குணராஜா, உதவிக்கல்விப் பணிப்பாளர் (தமிழ்) ஆர்.ஜே.பிரபாகரன், உதவிக்கல்விப் பணிப்பாளர்(ஆரம்பக் கல்வி) ஆர்,பாஸ்கரன். சிறப்பு அதிதிகளாக பாடசாலை மேம்பாட்டுத் திட்ட இணைப்பாளர் கே.சிவராசா, ஆசிரிய ஆலேசகர் திருமதி ஜமுனா இந்திரகுமார், கிராம நிலதாரி எஸ்.டிலக்சன் ஆகியோரும், அழைப்பு அதிதியாக தாழங்குடா விநாயகர் வித்தியாலய அதிபர் சா. மதிசுதன் அவர்களும் கலந்து கொண்டனர்.
அதிதிகள்; வரவேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் கொடியேற்றுதல், தேசிய கீதம் இசைத்தல், மங்கள விளக்கேற்றல், இறைவணக்கம், அதிதிகளின் உரை, மாணவர்களின் உடற்பயிற்சி நிகழ்வுகள், அணிநடை, விளையாட்டு நிகழ்வுகள், பரிசுப் பொருட்கள் வழங்கல் எனப் பல்வேறு நிகழ்வுகள் விழாவை அலங்கரித்தன.

பிரதம அதிதியாக கலந்து கொண்ட கோட்டக்கல்விப் பணிப்பாளரும், அகில இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத் தலைவருமான கே.நல்லதம்பி அவர்கள் தமது உரையில் கிராமப் புற மாணவர்களின் வளர்ச்;சி பற்றியும் அவர்களின் திறமை வெளிப்பாடு பற்றியும் பாராட்டி பேசியதுடன், இப் பாடசாலையின் சிறிய மாணவர்களின் உற்சாமான விளையாட்டு நிகழ்வு தன்னை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளதுடன், நகரப் புற மாணவர்களின் திறமைகளுக்கு கிராமப்புற மாணவர்களும் சளைத்தவர்கள் இல்லை எனக் குறிப்பிட்டார்.

மேலும் தாழங்குடா ஸ்ரீ விநாயகர் வித்தியாலய உயர்தரப் பெறுபேறுகள் கிராமமானது வளர்ச்சியடைந்து வருவதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது என்றும், மாணவர்களின் பல்கலைக்கழகத் தெரிவில் வைத்தியத்துறைக்கு தெரிவாகியுள்ளமை போன்ற சாதனைகள் மகிழ்ச்சியழிப்பதாகவும், மென்மேலும் தாழங்குடா கிராமத்தின் இவ்விரு பாடசாலைகளும் பல சாதனைகளை நிலைநாட்ட வேண்டும் அதற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகவும் உரையில் குறிப்பிட்டார்.