பௌத்த மதத்திற்கு உயர்ந்த பட்ச அங்கீகாரத்தை சமகால அரசாங்கம் வழங்கியுள்ளது



பௌத்த மதத்திற்கு உயர்ந்த பட்ச அங்கீகாரத்தை சமகால அரசாங்கம் வழங்கியுள்ளது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு சேதவத்த வெஹரகொட புராண விஹாரையில் நேற்று இடம்பெற்ற சமய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது பிரதமர் இதனை குறிப்பிட்டார்.

தேசிய ரீதியிலான பௌத்த மத நிகழ்வுகளுக்கு கூடுதல் உதவிகளும் பெற்றுக்கொடுக்கப்படும்;. பௌத்த மதத்தின் மேம்பாட்டுக்காக பௌத்தர் அல்லாத வேறு சமூகத்தினரிடமிருந்தும் கூடுதலான ஆதரவை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க மேலும் தெரிவித்தார்.