பெரிய கல்லாற்றில் அசையாமல் அமர்ந்திருந்து அற்புதங்களுடன் அருளாட்சி புரியும் ஆனைமுகன்


 (ரவிப்ரியா)
பெரியகல்லாறு சர்வார்த்த ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வருடாந்த தேரோட்டம் 20 புதன்கிழமை இடம்பெறும்அதையொட்டி இந்த சிறப்பு கட்டுரைபிரசுரமாகிகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொன்று தொட்டு கல்விக்கான பெரும் தளமாக பெயர்பெற்றதான் பெரியகல்லாறு என்னும் கிராமம்அரசியலிலும் ஒன்றல்ல இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை உருவாக்கி தமிழ் தேசியத்திற்கு பெருமை சேர்த்த கிராமம்
இந்து கிறிஸ்தவ தலங்கள் நிறைந்து காணப்படும் புண்ணிய பூமிவடக்கு எல்லையை புத்தம் புதிய பாலம் காட்டி நிற்கின்றது,  அந்த பாலத்திலிருந்துஅதிகாலையில் சூரியன் உதிக்கும் காட்சியையும்அந்தி மாலையில் சூரியன் அஸ்தமிக்கும்காட்சியையும் பார்வையிடும் ஒருவன் இதுவல்லோ கைலாயக் காட்சிஎன்று பரவசப் படவே செய்வான்.
அதனால்தானோ என்னவோ பிள்ளையாரும் தனக்கு பிடித்த இடம் இதுதான் என்று தனக்கொரு இடத்தை அடையாளப்படுத்தி ஒதுக்கிக் கொண்டார்ஒதுக்கியஅந்த இடத்தில் அவர் அருளால் ஓர்  ஏழடுக்கு இராஜகோபரத்தையும் எடுப்பாக எழுந்தருளச் செய்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.           
இயற்கை வனப்பால் இதயத்தைத் தொடும் கிராமமாம் பெரியகல்லாறு,  மட்டு மாவட்டத்தின் தென்பகுதி எல்லைக் கிராமமாகவும்  திகழ்கின்றதுஅம்பாரை மாவட்டத்திலிருந்து பிரதான வீதியூடாக வருவோருக்கு மட்டக்களப்பு மாவட்டத்தை அடையாளப்படுத்தும் முதலாவது சப்ததள இராஜகோபுரமாக தமிழ்நாடு சிற்ப கலாநிதி என்.இராஜபோல் ஸ்தபதியால் அமைக்கப்பட்டு கலை அழகுமிளிர வர்ணமயமாக வண்டி விநாயகர் நாலாபறமும் காட்சி தர நிமிர்ந்து நிற்கின்றது.
வளைந்து வரும் மட்டு வாவி ஆலயத்தின் மேற்குப்பக்கம் அரணாக அமைய தென்னம் தோப்பும் வில்வ மரமும் அதற்கு மெருகூட்டஆலயத்தின் எதிர்பக்கம் அரசஆல மரங்கள் விருட்சங்களாக நின்று பசுமை பரப்பசுனாமி தாங்கும் குளிர் ஓடையைக் கடந்து சவுக்கு தோப்பு சுனாமி அரணுடன் கடல் அலைகள் மோதி இன்னிசை எழுப்ப  அண்ணாந்து பார்க்கின்ற இராஜகோபுர அமைவிடம் கொட்டிக் கிடக்கும் இயற்கை அழகால் புடம்போட்ட தங்கமென பிரகாசமாக,  புனிதபிரதேசமாக புலப்படுகின்றது..
கடற்கரை தீர்த்தோற்சவங்களுக்கு வாய்ப்பாக இருக்கின்றதுதமிழ் நாட்டில் உள்ள முக்கிய ஆலயங்களில் அனேகமானவை இத்தகைய இயற்கை செழிப்புள்ள இடங்களிலேயே அமையப்பெற்றிருப்பதும் இங்கு குறிப்பிடத் தக்கதுஅதிஸ்டவசமாக தமிழ்நாடு காரைக்குடி சிற்ப கலாநிதி என் இராஜகோபால் ஸ்தபதியாகஇருந்து இராஜகோபுரத்தை அமைத்துள்ளமையானது அற்புதமாக இருக்கின்றதுஇந்திய ஆலயங்களின் அழகை இங்கே கொண்டுவந்திருக்கின்றது.
ஏறத்தாள 500 அண்டுகள் பழமை வாய்ந்தததும் மக்கள் இக் கிராமத்தில் ஒல்லாந்தர் ஆட்சிக்கு முற்பட்ட  காலத்திலேயே குடியேறிய மக்களால் அமையப்பெற்றதும் கிராமத்தின் முதலாவது ஆலயம் என்பதும் வரலாற்றுப் பதிவாக இருக்கின்றதுஅத்துடன் இவ்வாலய பராமரிப்பிற்காக கண்டியை ஆட்சி செய்த ஸ்ரீவிக்கிரமசிங்கன் அரசனால் நெற் காணிகள் வழங்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்தத் காலம் முதல்அருணகிரிநாதர் வாழ்ந்த அந்தக் வாகன வசதி குறைந்த காலத்திலிருந்துபாதயாத்திரையாக கதிர்காம கந்தனை தரிசிக்கச் செல்லும்,யாழ்ப்பாணம்திருகோணமலைமட்டகளப்பு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் இடைத்தங்கலாக இந்தக் கிராமத்தில் தங்கிச் செல்வது வழக்கம்.
நீர் வசதியும் அடர்ந்த காட்டின் நிழல் வசதியும்மத்தியில் சிறு வெளியும் கொண்ட  பழக்கப்பட்ட பிரதேசம் என்பதாலஅடியார்கள் ஒருநாள் தங்கிச் செல்வதுஅவர்களுக்கு சௌகரியமாக இருந்து வந்தது..
அன்றும் அப்படித்தான் இந்தியாவிலிரந்த வருகை தந்த ஒரு சாமியாரும் அவர் குடும்பத்தினரும் அவரோடு சேர்ந்த வந்த யாழ் பக்தர்களும்அன்று தங்கி ஓய்வெடுத்ததுவழக்கம்போல தங்கள் காவலுக்கு சிறிய கணபதி சிலையை ஒரு மரத்தின் கீழ் வைத்து வணங்கிவிட்டு கண்ணுறங்கினார்கள்.
காலையில் விழித்து பயணத்தை தொடர ஆயத்தமானார்கள்பிள்ளையாரை வணங்கிவிட்டுஅச் சிறிய சிலையை மீண்டும் தங்களோடு கொண்டு செல்ல எடுக்கமுயன்ற போதுதான் அந்த அற்புதம் நடைபெற்றது.
சிறிய சிலைதான்ஆனால் அதை எடுக்க முடியவில்லைஅசைக்கவும் முடியவில்லைஇருந்த இடத்தில் இருந்து இம்மியளவும் அசையாமல் மனித பலத்திற்குசவால் விடும் அற்புத சக்தி கொண்டதாக அந்த சிலை அப்படியே இருந்தது.
முயற்சியில் தோல்வி கண்ட அவர்கள் அதை ஒரு அற்புதச் செயலாகவே எண்ணிமெய்சிலிர்க்க அரோகரா கோத்தை எழுப்பி பயணத்தைத் தொடர்ந்தார்கள்.
செல்லும் வழியில் எதிர்ப்பட்டவர்களிடம் இந்த அற்புதத்தை கூறிச் சென்றார்கள்இந்த விடயம் ஊர் முழுக்கப் பரவியதுஅசையாதிருக்கும் ஆனை முகனைப்பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்தார்கள்பிள்ளையார் கடாட்சம் ஊருக்கு கிடைத்தவிட்டதென பேரின்பம் கொண்டார்கள்.
மடஆலயமாக ஆரம்பிக்கப்பட்ட இவ்வாலயம் 1960ல்திரிதள தூபி ஆலமாகவும், 1994ல் கொடி தம்பத்துடன் கூடிய ஆலயமாக பேராலயமாக வளர்ச்சி பெற்றது.; 2011ல் சப்த தள இராஜகோபரத்திற்கு அடிக்கல் நடப்பட்டு, 2018 பெப்ரவரி;யில் அது பூர்த்தி செய்யப்பட்டு வெகு சிறப்பாக கும்பாபிஷேகமும் நடைபெற்றது.
அத்துடன் புதிய தேரும் உருவாக்கப்பட்டு அனைத்து அமசங்களும் பொருந்திய ஆலயமாக நிமிர்ந்து நிற்கின்றதுபுதிதாக பஞ்சமுக கணபதி விக்கிரகமுமஅமையப்பெற்றுள்ளததுஅத்துடன் கதிர்காம யாத்திரிகர்கள் வசதியாக தங்கிச் செல்வதற்கான ஒரு மண்டபமும் அமைக்கப்பட்டுவருகின்றதுமூலஸ்தானத்தில்தொடர்ந்து அந்த அற்புத விக்கிரகமே இருந்துவருகின்றது.
மேலும் இவ்வாலயத்தில் சிவன்சக்திநாகதம்பிரான்வள்ளி தெய்வானை சகிதம் முருகப்பெருமானநவக்கிரகங்கள்வைரவர்சண்டேஸ்வரர் என அனைத்துவிக்கிரகங்களும் தனித்தனியாக பீடங்களுடன் ஆலயத்தில் அமையப்பெற்றுள்ளததுஎனவே எல்லா விசேட  புஜைகளும் இங்கு இடம்பெறுவது வழக்கம்எனவேகௌரி காப்புபிள்ளையார் காப்புகந்தஷஸ்டிசிவராத்திரி போன்ற முக்கிய விரதங்களும் இங்கு அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.