வெப்ப காலநிலை தொடரும்



நாடு முழுவதிலும் பெரும்பாலான பிரதேசங்களில் தொடர்ந்தும் வெப்பத்துடன் கூடிய காலநிலை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கடமையில் உள்ள பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க தெரிவிக்கையில் இந்த காலநிலை பெரும்பாலும் வடமேல், வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் அம்பாறை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனைய இடங்களிலும் இந்த நிலையை காணமுடியும். வாயு மண்டலத்திலுள்ள வெப்பநிலை அதிகரித்துள்ளது. இதுவே இதற்கு காரணமாகும். குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சியை எதிர்பார்க்க முடியாது.

காற்றின் வேகமும் குறைந்துள்ளது. இவ்வாறான சூழ்நிலையின் காரணமாக உடல் வெப்பநிலை அதிகரிப்பதினால் வியர்வையும் கூடுதலாக வெளியேறும். இவ்வாறான காலநிலையே மக்களுக்கு வெப்பமான காலநிலையாக தெரிகின்றது. இது பொதுவாக சாதாரண நிலையாக கூறமுடியாது. கடந்த வருடங்களிலும் மார்ச் ஏப்ரல் மாதங்களில் இவ்வாறான காலநிலை காணப்பட்டது. பருவப்பெயர்ச்சி காலநிலை காரணமாக இந்த மாற்றங்கள் இடம்பெறுகின்றன.

இந்த காலநிலையின் காரணமாக மக்கள் கூடுதலான தண்ணீரை பயன்படுத்த வேண்டும். திறந்த வெளிகளில் கடுமையான பணிகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளவேண்டு. என்றும் நாம் பெரும் மக்களை அறிவித்துள்ளோம்.