அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு






தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு - சுகாதார அமைச்சு மற்றும் ஜனாதிபதி டெங்கு ஒழிப்பு பணிப்பிரிவு ஆகியவற்றின் பணிப்புரைக்கு அமைவாக தேசிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்னறன

இதற்கு அமைவாக டெங்கு ஒழிப்பு நடவடிக்கையினை பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் ,பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர் .

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் பாடசாலை சுகாதார கழக ஆசிரியர் மேனகா மேவின் ஒழுங்கமைப்பில் வித்தியாலய அதிபர் திருமதி என் .தர்மசீலன் தலைமையில் மற்றும் பாடசாலை டெங்கு ஒழிப்பு குழு ஆசிரியர்கள் ,மாணவர்கள் பங்களிப்புடன் அமிர்தகழி பொது சுகாதார பிரிவு பரிசோதகர்கள் ,இணைந்து சமூகத்திற்கு விழிப்புணர்வூட்டும் வகையில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு தொடர்பான பதாகைகளை ஏந்தியவாறு விழிப்புணர்வு ஊர்வலமும் , வீதி நாடகமும் இடம்பெற்றன

இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கை நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,பொது சுகாதார பரிசோதகர் கலந்துகொண்டனர் .