சிஜடி யினரால் மட்டக்களப்பு சிறைச்சாலை வாசலில் விடுதலையாகி வெளியில் வந்தவர் கைது

கனகராசா சரவணன்--

மட்டக்களப்பு சிறையில் இருந்து விடுதலையாகி வெளியில் வந்த வெல்லம்பிட்டிய திலான் சதுரங்க இன்று திங்கட்கிழமை மாலை சிறைச்சாலை வாசலில் வைத்து விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் சி ஜ டி யினர் கைது செய்யப்பட்டார் என பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


குறித்த நபர் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் புதையல் தோண்டிய சம்பவம் ஒன்றில் கைது செய்யப்பட்டு 2 மாதம் சிறையில் அடைக்கபட்டுள்ள நிலையில் குறித் வழக்கில் அபதாரமாக 50 ஆயிரம் ரூபா செலுத்துமாறு நீதிமன்றம் கடந்த வாரம் தீர்பளித்து விடுதலைசெய்யப்பட்டார் இருந்தபோதும் அபதார தொகையை அன்றைய தினம் செலுத்ததன் காரணமாக மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் 


இந்த நிலையில் அபதார தொகையை இன்று நீதிமன்றில் செலுத்திய பின்னர் சம்பவதினமான திங்கட்கிழமை மாலை 4 .00 மணியளவில் சிறையில் இருந்த வெளியே விடுதலை செய்தபோது சிறைச்சாலையை சுற்று பாதுகாப்பில் இருந்த விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் சி ஜ டி யினர் அவரை கைது செய்தனர் 


இதில் கைது செய்யப்பட்டவர் கடந்த 2008 ம் ஆண்டு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்பான குற்றச்சாட்டின் தேடப்பட்டுவந்த நிலையில் கைது செய்யப்பட்டு கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார் 


அதேவேளை பிள்ளையானுடன் நெருக்கமானவர் எனவும் முன்னர் விசேட அதிரடிப்படையில் கடமையாற்றியவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது