போரதீவுப்பற்று வெல்லாவெளி சமுர்த்தி வங்கியின் கைவிசேட நிகழ்வு



எஸ்.நவா

போரதீவுப்பற்று வெல்லாவெளி சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கியின் புதுவருடத்தை முன்னிட்டு நேற்று  (16) செவ்வாய்க்கிழமை வங்கி முகாமையாளர் திருமதி. ரீ.யோகச்சந்திரன் தலைமையில் மிகவும் சிறப்பான முறையில் வங்கி வாடிக்கையாளர்களுக்கும் உத்தியோகத்தர்களும் கைவிசேடம் பாரம்பரிய முறையில் சிற்றுண்டி வகைகள் வழங்கிவைக்கப்பட்டது

இதன்போது மகாசங்க முகாமைத்துவப் பணிப்பாளர் ரீ.தியாகராஜா கே.சிவலிங்கம் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.