பிள்ளைகளின் கற்றலில் பெற்றோர்களின் பங்களிப்பு


ஒரு நாட்டின் கல்விமுறை திறம்பட இயங்கவும் கல்வித்தரம் நன்கு உயரவும் உழைக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திடமும் கல்வியதிகாரிகளிடமும் இன்னும் முக்கியமாக ஆசிரியர்களிடமும் பெற்றோர்களிடமுமே தங்கியுள்ளது. ஆனால் நமது பெற்றோர்கள் பலர் தம் பிள்ளைகளின் கல்விக்கு ஆசிரியர்கள் மட்டுமே பொறுப்பு வகிப்பதாகவும் பிள்ளையை பாடசாலையில் சேர்த்ததும் தமது பொறுப்பு முடிந்து விடுவதாகவும் கருகின்றார்கள். ஆனால் உண்மையில் பிள்ளை கற்பதற்கு வேண்டிய கற்றல் உபகரணங்களையும் ஏனைய பொருட்களையும் வாங்கிக் கொடுத்தவுடன் பெற்றோரின் பொறுப்பு தீர்ந்து விடுவதில்லை.

குடும்பங்களில் பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்படுவதனால் பெற்றோர்கள் தமது ஜீவனோபயத்திற்கு பொருள் தேட பல்வேறு முயற்சிகளில் ஈடுபட வேண்டியுள்ளது. இதனால் பிள்ளைகளின் கல்வியில் தாம் வகிக்க வேண்டிய பொறுப்பினை உணர்ந்து கொள்வதற்கு வேண்டிய சிந்தனை வளர்ச்சிக்கு காலம் இல்லாமல் போகின்றது.

குடும்பத்தின் சமுதாய, பொருளாதார நிலை, மதிப்பு நிலை, வீட்டுச் சூழ்நிலை, கல்வியின்பால் குடும்பத்தார் கொண்டுள்ள மனப்பான்மை, பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் உள்ள சமூகத் தொடர்பின் நிலை, குடும்பத்திற்கும் பாடசாலைக்கும் இடையேயுள்ள உறவின் தன்மை போன்றவற்றால் பிள்ளைகளது கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்களே அல்லது தடை செய்யவோ இயலும்.

கல்விச் செயற்பாடுகளில் பெற்றோரின் வகிபங்கானது புதிய ஒரு விடயம் அல்ல. கல்விக்கும் குடும்பத்தின் தொழிற்பாடுகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் நீண்டகாலமாக இருந்து வந்துள்ளது. பிள்ளைகளின் உள விருத்தி, உடல் விருத்தி, வாழ்க்கை பழக்கவழக்கங்கள், சமூக காட்டத்திற்கான கல்வி, கலாசாரம் பற்றிய அடிப்படை விளக்கங்களை, சமயம் மற்றும் ஒழுக்கக்கல்வி, மொழியறிவு முறையியல், கல்வி மூலம் பெறப்படும் தொழில்சார் அறிவு போன்றவற்றினை வழங்குவதில் பெற்றோர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். குறிப்பாக கூறுவதாயின் சமூகமயமாக்கத்திற்கான அடிப்படைகளை பெற்றோரின் பணி இவ்விடயத்தில் குறிப்பிடத்தக்கதாக இருந்தாலும் கல்வியறிவற்ற பெற்றோர் கூட தமது பிள்ளைகளின் விருத்தியில் கொண்டுள்ள ஆர்வ மேலீட்டினால் போதிய ஊக்குவிப்பினை வழங்கி வந்துள்ளார்.

பாடசாலையின் வினைத்திறனுக்கு பெற்றாரின் பங்களிப்பு அவசியமென்ற கருத்து வலியுறுத்தப்படுவதுடன் இதற்காக சான்றுகளும் ஆய்வுகள் மூலம் எடுத்துக் காட்டப்படுகின்றன. பிள்ளை மையக் கல்வி ஊக்குவிக்கப்படுகின்றமையினால் ஆசிரியரின் மரபு வழி வகிபங்களில் மாற்றங்கள் உண்டாகின்றன. மாணவர்களின் கற்றல் திறன்களை விருத்தி செய்யும் நேரத்தில்; தேர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு கற்றல் கற்பித்தலுக்கு முதன்மையளிக்கப்பட்டது.

மறுபுறத்தில் மாணவரின் எதிர்பார்ப்புக்கள் விரிவடைந்துள்ளன. மாணவர் மத்தியில் ஏற்படும் போட்டிகள் கற்றல் நடவடிக்கைகளில் திறம்பட ஈடுபட வேண்டும் என்ற உந்துகோல்களையும் கொடுக்கின்றன. இவை பாடங்களுக்கு அப்பால் புதிய நுட்பங்களை தேடியறியும் தேவையை உருவாக்கியுள்ளன. இவற்றுக்கு வகுப்பறையில் ஆசிரியரால் வழங்கப்படும் உதவியும் வழிகாட்டல்களும் போதாது. வீட்டில் தாய், தந்;தை, சகோதரிகள், நண்பர்கள் மற்றும் அயலவரின் உதவியும் தேவை. இவற்றின் விளைவுகள் தனியாள் அடிப்படைக் கற்றலுடன் கூட்டுக் கற்றலுக்கு வழிவகுக்கின்றன.

பாடசாலைகளின் அண்மைக்காலப் போக்கினை அவதானிக்கும் போது அவற்றின் நாளாந்த நடைமுறையில் பல மாற்றங்கள் இடம்பெறுவதனைக் காணலாம். புதிய மாற்றங்களுக்கூடாக பல வாய்ப்புக்கள் வழங்க முற்பட்டாலும் சமூகக் கட்டமைப்பின் பாதிப்புக்கள் அவற்றுக்குத் தடையாக உள்ளன. இவற்றிடையே தனித்துவம் பேணும் நோக்கில்; பாடசாலைகள் தனித்துவத்தை இழந்தாலும் வெளிப்புற நிறுவனங்கள் அதற்குச் சவாலாக இருப்பதனையும் நாம் காண்கின்றோம். இவை கல்வி பற்றிய நோக்கில் ஆசிரியருடைய சிந்தனைகளும் பெற்றோர்களின் எதிர்ப்பார்ப்புக்களும் மாணவரின் அனுபவங்களும் ஒன்றுக்கொன்று வேறுபட வழிவகுத்தது.

இவ்வாறான நிலைமைகளின் கீழ் பாடசாலை மற்றும் வகுப்பறைச் செயற்பாடுகளை முற்றுமுழுதாகப்; பாடசாலைகள் பொறுப்பில் விட்டுவிடலாமா? அல்லது பெற்றோரின் உதவியின்றி மேற்கொள்ள முடியுமா? என்ற வினாக்கள் எழுகின்றன. உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட கல்விச் சமூகவியல் ஆய்வுகள் வெற்றிகரமான பெற்றோர் பற்றியும் கல்விச் செயற்பாடுகளில் அவர்கள் நமது பிள்ளைகளின் கல்வியில் காட்டுகின்ற ஆர்வத்திற்கும் வழங்குகின்ற ஊக்கங்களுக்கும் பிள்ளையின் பெற்;றோர்களுக்குமிடையில் இணைவுள்ளது. வீட்டில் கல்விச் சூழல் நன்கு அமையும்போது பிள்ளையின் கல்வியில் முன்னேற்றம் உண்;டு என மாஸ்கிறெவ் - 1966 எடுத்துக்காட்டியுள்ளார். இவருடைய ஆய்வானது வீட்டுச் சூழல், சமூக வகுப்பு, பெற்றோரின் தொழில் வருமானம் ஆகியவற்றின்; அடிப்படையில் வேறுபடுகின்றமை எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

மாணவர்களின் கற்றல் செயற்பாட்டில் பெற்றோர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். பெற்றோரின் செயற்பாடுகள் கூடுதலான அளவு மாணவர்களின் இடைவிலகலில் செல்வாக்குச் செலுத்துகின்றது. பிள்ளைகளின் கற்றல் உபகரணங்களை வாங்கிக் கொடுக்காமை, பிள்ளையின் நடத்தையின் மீது கவனமின்மை, கவனயீனமாகச் செயற்படுதல், பெற்றாரின் அக்கறையின்மை, பெற்றோர் பிரிந்து வாழ்தல், வெளிநாடு செல்லுதல், மதுபாவனை, பலதாரத் திருமணம், போன்றவை மாணவர்களின் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. நிறைவாக இருந்தால் மற்றவர்களிடம் சொல்லும் பழக்கத்தையும், குறையிருந்தால் ஆசிரியரிடம் சொல்லும் பழக்கத்தையும் பெற்றோரும் கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் பெற்;றோர் ஆசிரியர் உறவு மேம்பாடடைந்து மாணவர்களின் கல்வி நிலை உயர்வடைய வழிவகுக்கும். நவீன கல்வி யுகத்தின் சவால்களை எதிர்கொண்டு எமது மாணவர்கள் முன்னேற்றமடைய ஆசிரியர்களும் பெற்றோரும் இணைந்து செயலாற்ற வேண்டும். பெற்றோர் அன்பாகவும் பண்பாகவும் நடந்து கொள்;வதன் மூலம் பிள்ளைகளை நற்பிரஜைகளாக்கலாம். பெற்றோரின் சிறந்த வழிகாட்டலும் சுறுசுறுப்பு சூழலுமே ஒரு பிள்ளையை எதிர்காலத்தில் சிறந்த தலைவராக்க உதவுகின்றன.

மேலும் பிள்ளைகளின் சிறந்த பாடசாலைக் கல்விக்கு பெற்றோரின் ஒத்துழைப்பு மிக அவசியமாகும். அந்தவகையில் பெற்றோர் - பிள்ளை தொடர்பானது பின்வரும் வகையில் சிறப்பானதாக அமைந்து காணப்பட வேண்டும்.

நாளாந்த நிகழ்வுகள் பற்றி ஒவ்வொரு நாளும் உரையாடுதல், அன்பை வெளிப்படுத்தல், புத்தகங்கள்,செய்தித்தாள்கள், சஞ்சிகைகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்பன பற்றி கலந்துரையாடுதல், நூலகங்கள், அரும்பொருட்காட்சி சாலைகள், மிருகக்காட்சி சாலைகள், வரலாற்றுத் தளங்கள், கலாசாரச் செயற்பாடுகள் போன்றவற்றுக்கு குடும்பமாக விஜயம் செய்தல், புதிய சொற்களைப் பயன்படுத்தி முயற்சி செய்வதை ஊக்குவித்தலும் சொல்வளத்தை விரிவாக்குதலும் என்பனவாகும். வளர்ந்தோர் அயலில் இல்லாத சந்தரப்பங்களிலேயே பிள்ளைகள் தமது சுயரூபத்தை காட்ட முற்படும் பாடசாலைகளில் ஆசிரியர்களின் மேற்பார்வை குறைந்தபட்ச நிலையில் இருக்கும் போது மோசமான நடத்தைகள் இடம்பெற வாய்ப்புண்டு.

பெற்;றோர் புலன் விசாரணை பணிகளை கைவிட்டு பிள்ளைகள் செல்லுமிடல், அவர்களின் நண்பர்கள் பற்றி சாதாரணமாகக் கேட்டு தெரிந்து கொள்ளலாம். கட்டிளைஞர்கள் அதிக சுதந்திரமுடையவர்கள். வீட்டுக்கு வெளியே அதிக நேரம் செலவிடுவார்கள். எனவே இவ்விளக்கங்களை அவசியமானது.

கட்டிளமைப் பருவ பிள்ளைகளின் சுதந்திரத்தினை பெற்றோர்களே தெரிவு செய்ய வேண்டும், சிறந்த நண்பர்களுடன் நட்பு கொள்வதனை ஊக்குவிக்கலாம், பிரச்சினைக்குரிய பிள்ளைகளை மேற்பார்வைக்கு உட்படுத்துவதுடன் மேற்பார்வையற்ற பிள்ளைக் குழுக்கள் தோன்ற இடமளிக்கக்கூடாது, பிள்ளைகள் மகிழ்வுடன் இருக்கக்கூடிய செயற்பாடுகளை ஒழுங்கு செய்து அவற்றை மேற்பார்வை செய்தல், பாடசாலைக்கு வெளியே பிள்ளை செலவிடும் நேரத்தை மட்டுப்படுத்தல், பாடசாலை நேரத்தில் மேற்பார்வை செய்யப்படாத நேர அளவினையும் குறைக்க முயற்சிக்கலாம்.

எனவே ஒவ்வொரு பெற்;றோரும் தங்களது பிள்ளைகளின் கற்றலில் அக்கறைக்; கொள்ளும் அதேவேளை அதனை தொடர்ச்சியான அவதானிப்புக்கும் உட்படுத்த வேண்டும். 'காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு' என அவரவர் பிள்ளைகளில் பெற்றோர்கள் மற்றப் பிள்ளைகளின் இயலாமை அல்லது வலிமையைக் கொண்டு மதிப்பிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். பொதுவாக பாடசாலை சார்ந்த பெற்றோர்களின் தொடர்பு நெருக்கமாகும்போது பிள்ளைகளின் கற்றல் செயற்பாட்டுத்தன்மைகள் உயர்வானதாக அமையும் என்பது யதார்த்தமாகும்.

சி.அருள்நேசன்
கல்வியியல் சிறப்புக்கற்கை மாணவன்
கிழக்குப் பல்கலைக்கழகம்