Saturday, April 13, 2019

பெரியகல்லாறு வலம்புரி விளையாட்டுக் கழகத்தின் துவிசக்கர வண்டிப்போட்டி

ads
ரவிப்ரியா

மட்டக்களப்பு அம்பாரை மாவட்ட சைக்கிள் ஓட்ட வீரர்களை ஒன்றிணைத்து மாபெரும் துவிசக்கர வண்டி போட்டியைபெரியகல்லாறு வலம்புரி விளையாட்டுக்கழகம் சிறப்பாக இன்று காலை (13) நடாத்தி முடித்துள்ளது. பெரியகல்லாறுசர்வார்த்த ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் முன்பாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உப்பிள்குணரெட்ண சம்பிரதாயபூர்வமாக பச்சை கொடியை அசைத்து போட்டியை ஆரம்பித்து வைத்தார்.

கழகத்தின் தலைவர் சி.கோகுலராஜ் தலைமையில் நடைபெற்ற இப்போட்டி பெரியகல்லாற்றில் இருந்து கல்மனைமட்டக்களப்பு பிரதான வீதியூடாக அரம்பித்து கல்லடி அரசைடி சுற்றுவட்டம் வரை சென்று மீண்டும் பெரியகல்லாற்றைவந்தடைந்தது.

களுவாங்சிக்குடி பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியும் போக்குவரத்துப் பொறுப்பதிகாரியம் இணைந்து ஆரம்பம் முதல்இறுதிவரை உரிய வீதிப் பாதுகாப்பை மிகவும் சிறப்பாக வழங்கிவைத்தனர்.

இப்போட்டியில் முதலாம் இடத்தை மட்டக்களப்பு சின்ன ஊறணியைச் சேர்ந்த ஐ.ராஜ்குமார் என்ற இளைஞர் பெற்றுவெற்றிவாகை சூடிக் கொண்டார்.. இரண்டாம் மூன்றாம் இடங்களை முறையே முறக்கொட்டான்சேனையைச் சேர்ந்தவிபுசன், மற்றும் களுவன்கேணியைச் சேர்ந்த ஏ.சுதர்சன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். 23 வீரர்கள் பங்குகொண்டஇப்போட்டியில் முதல் 13 பேருக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டன.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி Nசியகொடியையும் கழக தலைவர் கழக கொடியையும் ஏற்றி வைத்து தேசிய கீதம்இசைக்கப்பட்டு. மங்கல விளக்கேற்றி பரிசளிப்பு நிகழ்வு ஆரம்பமானது.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உப்பிள் குணரெட்ண தனதுரையில் தனது அறிவுறுத்தல்களை ஒழுங்காககடைப்பிடித்து இந்த கழகம் போட்டியை சிறப்பாக நடாத்தி முடித்தமைக்கு தனது மகிழ்ச்சியை வெளியிட்டார். இந்தபுத்தாண்டை சமாதானமாகவும் சந்தோஷமாகவும் அனைவரும் கொண்டாட வேண்டுமெனவும், மற்றவர்களைப்பாதிக்காத வகையில் பொலிஸ் நிலையத்திற்கு யாரும் வரவேண்டிய அவசியத்தை ஏற்படுத்தாத வகையில் மதுபோதைமூலம் ஏற்படுகின்ற சச்சரவுகளை தவிர்த்து சுமூகமாக கொண்டாட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

பிரதேசசபை உறுப்பினர் சண்முகம் கணேசநாதன் தனதுரையில, இக் கழகத்தின் இந்த முயற்சியை வெகுவாகப்பாராட்டுவதாகத் தெரிவித்தார்.; எல்லா கழகங்களும் கிரிக்கற்றின்மீது மட்டும் கவனத்தை செலுத்தி வருகின்றஇவ்வேளையில் இந்த கழகம் தனது குறுகியகால வளர்ச்சியில் இத்தகைய ஊருக்கு பெருமை சேர்க்கக் கூடிய போட்டியைமட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களை இணைத்து மேற்கொண்டமையானது அவர்களின் திறமையானசெயற்பாட்டிற்கு எடுத்துக்காட்டாக அமைகின்றது. எனவே பெரியகல்லாறு விளையாட்டு வீரர்கள் 10 வருடங்களுக்குமுன்னர் சாதித்தவைகளை மீண்டும் நிலைநாட்ட இளைஞர்களை சரியான முறையில் நெறிப்படுத்தி ஊக்கப்படுத்திஇம்மண்ணுக்கு பெருமை சேர்க்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளரும் அதே கட்சியின் மாவட்ட (தமிழ);ஒன்றியத்தின் தலைவருமான ஹெங்காதரன் தனதுரையில் கழகம் ஆரம்பிக்கக்கப்பட்டு குறுகியகாலத்தில் நல்ல வளர்ச்சிகண்டுள்ளதாகப் பாராட்டினார். அத்துடன் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இங்கு கடமையைப்பொறுப்பேற்றபின் இதுவரை இருந்த பொறுப்பதிகாரிகளை விட தனது விசேட நுண் அறிவால் இப் பிரதேசங்களில்இடம்n;பற்ற கொள்ளைகள் களவுகள் தொடர்பாக 5 குழுக்களை துரிதமாக கைது செய்து அவர்களுக்கு தண்டனைபெற்றுக் கொடுத்துள்ளது குறித்து அவருக்கு தனது பாராட்டைத் தெரிவித்துக் கொண்டார்.

இந் நிகழ்வின் ஆரம்பத்தில் அதிஸ்டலாபச் சீட்டிழுப்பு மற்றும் கழக வீரர்களுக்கான சீருடை அறிமுகம் என்பனஇடம்பெற்றன.

சைக்கிள் ஒட்டவீரருக்கான பரிசளிப்பில் முதலாவது பரிசை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மற்றும் பிரதேச சபைஉறுப்பினர், மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர் ஆகியோர் இணைந்து வழங்கினர்.

ஏனைய பரிசுகளை ஜோன் பிரசன்னாபிள்ளை, ஜேசுதாசன் மகேந்திரராஜா, தலைவர், , கழக உறுப்பினர்கள், கழகமுக்கியஸ்தர்கள் போஷகர்கள் ஊடகவியலாளர் அகியோர் வழங்கி வைத்தனர். பெரியகல்லாறு வரலாற்றில்பதியப்படவேண்டிய ஒரு முதலாவது சைக்கிள் விளையாட்டு நிகழ்வாக எல்லாமே சிறப்புற நடைபெற்ற இந் நிகழ்வில்தேசிய கீதத்தை எமது தாய்மொழியில் ஒலிக்க விட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அதற்கான உரிமைஎமக்கிருப்பதால் அதை எதிர்கால நிகழ்வுகளில் பயன்படுத்த பழகிக் கொள்வது எமது பெறுப்பு.

பெரியகல்லாறு வலம்புரி விளையாட்டுக் கழகத்தின் துவிசக்கர வண்டிப்போட்டி Rating: 4.5 Diposkan Oleh: Office
 

Top