கிராம சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் போரதீவுப்பற்று மக்களுக்கு சுத்தமான குடிநீர்


 (பிரவீன் ராஜா )

அதிமேதகு ஜனாதிபதியின் விசேட அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்றங்களினால் பல்வேறு விசேட செயதிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட சுரவணையடியூற்று மக்களுக்கான கிராமிய   நீர்வழங்கல் திட்டத்தினை திறந்துவைக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (11-04-2019) இடம்பெற்றது. சுத்தமான நீர் இன்மையால் நீண்ட காலமாக கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட இக் கிராமிய நீர் வழங்கல் திட்டமானது புனர்நிமாணம் செய்யப்பட்டுள்ளதுடன்  தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை மூலம் மொத்தமாக நீரை பெற்று மக்களுக்கு விநியோகிக்கும் வகையில் வடிவைக்கப்பட்டுள்ளது.

போரதீவுப்பற்று பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் யோ. ரஜனி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ஆர். ரகுலநாயகி அம்மணி அவர்கள் மற்றும்  உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திரு சி . பிரகாஷ் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நிலைய பொறுப்பதிகாரி ஏ. ஜெகதீபன் ஆகியோர் கலந்துகொண்டு  நீர் விநியோக நடவடிக்கைகளை  ஆரம்பித்துவைத்தனர்.  மேலும்  போரதீவுப்பற்று பிரதேச சபையின் பிரதி தவிசாளர் மற்றும் சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டது இந்நிகழ்வில்  ஜனாதிபதி செயலக பிரதிநிதிகள் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.

மேலும் இத்திட்டத்தை புனரமைப்பு செய்வதற்கான நிதி ஒதுக்கீடு போரதீவுப்பற்று பிரதேச செயலகம் மற்றும் குறித்தொதுக்கப்பட்ட மாகாண அபிவிருத்திக்கொடை வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.