அரசாங்கத்துடன் தொடர்ந்தும் ஒத்துழைப்புடன் செயற்படுவதாக சீனா உறுதி



அரசாங்கத்துடன் தொடர்ந்தும் ஒத்துழைப்புடன் செயற்படுவதாக சீனா உறுதியளித்துள்ளது. பல்வேறு துறைகளிலும் இருதரப்பு உறவுகள் வலுவடைந்திருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷென் ஷ்வேங் தெரிவித்துள்ளார்.

தமிழ் - சிங்கள புத்தாண்டு வாழ்த்து செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இலங்கையின் வெற்றிக்குத் தேவையான உதவிகளை வழங்க சீன என்றும் முன்னிற்கிறது. புத்தாண்டுடன் இருதரப்பு உறவுகள் மேலும் வலுவடையும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.