மட்டக்களப்பில் பெரிய வெள்ளி சிலுவைப்பாதை வழிபாடு


சிஹாராலத்தீப்

உலகெங்கும் வாழும் கிறிஸ்தவ மக்கள் ஏசுநாதர் அனியாயமாக யூதத் தலை வர்களின்சட்டவல்லுனர்களால் தண்டனைக்குட் படுத்தப்பட்ட பின்னர் சிலுவையைசுமந்து செல்லும் வழியில் எதிர்நோக்கும் உபாதைகளை வருடாந்தம் நினைவு கூர்ந்து அனுஷ்டிக்கும் பெரிய வெள்ளிக் கிழமை சிலுவைப்பாதை வழிபாடு கிழக்கு மாகாணத்தின் முன்னணி கத்தோலிக்க ஆலயங்களில்  19 காலை நடைபெற்றது.

மட் டக்களப்பு மாவட்டத்திலும் உள்ள கத்தோலிக்க ஆலயங்களிலும் நேற்று19 இந்த வழிபாடு பெருமளவு கத்தொலி க்க பக்தர்களின்பங்கேற்புடன் இவ் வழிபாடு இடம்பெற்றது.

மட்டக்களப்பு நகரில் புனித தேவமாதா பேராலயத்தின் ஏற்பாட்டில் பங்குத் தந்தை ஜெ.அன்னதாஸ் அடிகளாரின் தலைமையில் இந்த வழிபாடு இடம் பெற்றது.

இப்பேராலயத்தில் ஆரம்பமான சிலுவைப்பாதை ஊர்வலம் மடடக்கலப்பு நகரின் பலவீதிகளில் பயணித்து மீண்டும் புனித தேவ மாதா பேராலயத்தில் நிறைவுபெற்றது.

இச்சிலுவைப்பாதை வழிபாட்டின்போது ஏசுபிரானுக்கு நிகழ்ந்த 14 உபாதை களும் கேந்திரங்களில் நினைவுகூரப்பட்டு பிரார்த்தனைகளும் இடம்பெற்றன.

நேற்றிரவு பெரிய வெள்ளிக்கிழமை தினத்தின் ஆண்டவரின் திருப்பாடுகள் காட் சிகள் மட் டக்கள ப்பு நகரில்மட் டக்களப்பு மறைமாநில ஆயர்.கலாநிதி பொன்னையா ஜோசெப் ஆண்டகையின் வழிகாட்டுதலில் புனித தேவ மாதா பேராலயத்திலும் .தன்னாமுனை புனித சூசையப்பர் தேவாலயம், சொறிக்கல் முனை சிலுவைக்கோவிலிலும் இடம்பெற்றது.

மட்டகளப்பு நகரின் தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னைஆலயம் ,புளியடிக்குடா செபஸ்தியாராலயங்களின் ஏற்பாட்டிலும் இன்று காலை சிலுவைப்பாதை வழிபாடுகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பெரிய வெள்ளிக்கிழமையைமுன்னிட்டு பிற்பகல் 3 மணிக்குமட் டக்களப்பு மறைமாநில ஆயர்.கலாநிதி பொன்னையா ஜோசெப் ஆண்டகையின் தலை மையில் புளியந்தீவு புனித தேவ மாதா பேராலயத்தில் விசேட வழிபாடு நடாத்தப்பட்டது.