கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களின் நேர்முகப் பரீட்சை திகதி விபரம் : கிழக்கு மாகாண கல்வி அமைச்சு

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு இலங்கை ஆசிரிய சேவையின் 3ம் வகுப்பின் II ம் தரத்திற்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நேர்முகப் பரீட்சை இந்த மாதம் 2019.05.20 ம் திகதி தொடக்கம் 2019.05.23 ம் திகதி வரை நடாத்துவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2019.05.20 ம் திகதி முதல்   2019.05.23 ம் திகதி வரையான நான்கு
நாட்களுக்கு திருகோணமலையில உள்ள கிழக்கு மாகாண பேரவைச் செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் குறித்த நேர்முகப்பரீட்சை நடைபெறவுள்ளதையும், தொண்டர் ஆசிரியர் தொடர்பான மேலதிக விபரங்களை http://www.ep.gov.lk/en/minieducationindex  என்னும் இணையதளத்தினூடாக பார்வையிடமுடியும் என்பதையும் அவர் மேலும் குறிப்பிட்டார் .