திருகோணமலையில் சட்டவிரோத மீன்பிடி வலைகள் மீட்பு

திருகோணமலை – வெருகலாறு பகுதியில் அங்கீகரிக்கப்படாத சட்டவிரோத மீன்பிடி வலைகள் கைப்பறற்ப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

திருகோணமலை – வெருகல் ஆரு பகுதியில் நேற்று கிழக்கு கடற்படை கட்டளைப் பிரிவின் கடற்படையினர் ரோந்து நடவடிக்கையை முன்னெடுத்திருந்த போது கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட 75 மீட்டர் நீளமான 11 சட்டவிரோத மீன்பிடி வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணையை முன்னெடுப்பதற்காக திருகோணமலை மீன்பிடி ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.