கிழக்கு மாகாணத்தின் விஞ்ஞான பீடம் ஆரம்பம்!

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடம் நாளை (புதன்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக் கழகத்தின் பதில் பதிவாளர் ஏ. பகீரதன் தெரிவித்தார்.

சௌக்கிய பராமரிப்பு பீடத்தின் மருத்துவ துறையில் 2012-13, 2013-14, 2014-15 மற்றும் 2015-16 பிரிவுகளும், தாதியர் துறையில் 2012-13, 2013-14, 2014-15, 2015- 16 மற்றும் 2016-17 பிரிவுகளும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அத்துடன், சௌக்கிய பராமரிப்பு பீடத்தின் மருத்துவ துறையில் 2016-17 மற்றும் 2017-18 பிரிவு தாதியர் துறையில் 2017-18, 2016-17 பிரிவு ஆகியன வரும் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கல்வி நடவடிக்கைகள் சித்திரைப் புத்தாண்டு விடுமுறையின் பின்னர் ஆரம்பிக்கப்படவிருந்தது. எனினும் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி மட்டக்களப்பு உட்பட நாட்டில் பல பாகங்களிலும் தற்கொலைத் தாக்குதல்கள் இடம்பெற்றதையடுத்து மீள ஆரம்பிக்கப்படும் திகதி பிற்போடப்பட்டிருந்தது.

இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்னர் பல்கலைக் கழக வளாகம் பாதுகாப்புத் தரப்பினரால் சோதனையிடப்பட்டு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து குறித்த பீடம் மீள ஆரம்பிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பதில் பதிவாளர் மேலும் தெரிவித்தார்.