தெளஹீத் ஜமாத் அமைப்பினை பாதுகாத்து வந்தது யார்? விரைவில் அம்பலப்படுத்துவேன் என்கின்றார் நீதி அமைச்சர்

பயங்கரவாத அமைப்பு என தடை செய்யப்பட்ட தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பினை பாதுகாத்து வந்தது யார் என்பதை விரைவில் தெரிவிப்பேன் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலாதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி பிரதேசத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அத்துடன் யுத்தத்தின் உச்சகட்டத்திலும் அதுதொடர்பான தகவல்களை வெளியிட ஊடகங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த கருத்து தொடர்பாக ஊடகவியலார் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ஊடகங்களுக்கு கைவைக்கவில்லை, மாறாக ஊடகவியலாளர்களை கடத்தினார். அதனால் ஊடகங்கள் மீது கைவைக்கவேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.

கடந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடுத்து தேசிய தெளஹீத் ஜமாத் உட்பட இரு அமைப்புக்களை தடை செய்ய்வதாக ஜனாதிபதி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.